Language Blossoms through Poetry

The first verse of Valmiki Ramanaya is a beautiful rendering with a double meaning depicting the Rishi Valmiki, who witnesses a hunter kill a male krauncha (crane) bird, and is moved to sorrow and compassion, which leads him to spontaneously compose a verse which became the first verse of the Ramayana. 

मा निषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः । यत् क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम् ॥

Though it might mean spontaneous cursing by the saint of the hunter, it praises the protagonist of the epic he is going to write.

Prose rendering of the verse goes thus: हे निषाद, यत् क्रौञ्चमिथुनादेकं काममोहितं अवधीः, त्वं शाश्वतीः समाः प्रतिष्ठां मा अगमः ।

“O Nishada (hunter), because you killed one of the Kraunca couple who was engaged in love, may you never obtain peace.”

मा निषाद in the shloka prima facie appears as two separate words; मा is used in the meaning of “don’t” and निषाद is used to address the hunter.

However, the shloka needs to be changed to accomplish the second meaning. It needs to be modified as below:

मानिषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः । यत् क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम् ॥

As you can see, the first word is now a compound (समास). It is explained as:

मानिषाद = मा लक्ष्मीः यस्मिन् निषीदति निवसति स मानिषादः where Mā (Lakshmi) resides, i.e. Vishnu’s heart. Hence Vishnu is called मानिषाद.

However, the word क्रौञ्च is to be interpreted as a human.

So the verse is addressed to Vishnu:

“O Mānishāda (Vishnu), because you killed one (Kraunca) “human” who was lustful (i.e. Ravana), may you always obtain fame.”

So you see, the original shloka has to be modified, to come up with a second meaning.

Sanskrit literature has many such beautiful poems that have double (or many) meanings, that have to be deciphered by their disciples (commentators), without whom it would be difficult for others to easily interpret!!

For example, the first verse of the celebrated Sanskrit poet Kalidasa’s famous epic poem Raghuvamśa (“the story of the dynasty of Raghu”, a king of the solar lineage of India) is as follows:

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये ।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।।

“I bow to the mother and father of the world, Pārvatī and Parameśvara (Ṥiva), who are inseparably conjoined, just like a word and its meaning are inseparably conjoined for the purpose of comprehension.”

This is the classic meaning of the verse. However, clever scholars discovered that they could make a pun on the last word by splitting it slightly differently.

First method of splitting:

पार्वती – परमेश्वरौ = Pārvatī and Parameśvara

Second method of splitting:

पार्वतीप – रमेश्वरौ = Pārvatīpa and Rameśvara

= Pārvatī’s husband and Ramā’s husband

= Ṥiva and Viṣṇu

In the second case, the word पितरौ is easily translated as “two fathers” instead of the special meaning of “father and mother” for the first case.

This seems to be a clever way of showing the equivalence of the two great Gods Shiva and Vishnu with the aim of calming sectarian rivalries and conflicts.

It is a joy to read poetry and be blessed to be blissful rather than get entangled in a controversy of which language is older… ! 

கம்ப சூத்திரம்

என்ன பெரிய கம்ப சூத்திரமா? கடினமான வேலைகளையும் புரியாத புதிர்களையும் இப்படி சொல்வது வழக்கம். இந்த சொல்லாட்சி எப்படி வந்திருக்கலாம் என ஆய்ந்த போது கிடைத்த விடை!

உவமைகளை கையாளுவதில் கம்பனும் காளிதாசனும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. ஆயினும் கம்பன் பிற்காலத்தானவன் ஆதலால் காளிதாசனின் படைப்புகளால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவேண்டும் – நான் கம்பன் காபி அடித்தார் என்று சொல்லவில்லை – inspire ஆகியிருக்க வாய்ப்புண்டு. இந்த வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

கம்பர் காவியத்தில் வரும் ஒரு ‘சித்திரங்களில்’ உதாரணத்திக்கு ஒன்று:

சீதா தேவியை மீட்கும் பொருட்டு இராமன் படை கடலைக் கடக்க வானரங்களுடன் கடலில் பாலம் அமைக்க எத்தனிக்கும் காட்சியை விவரிக்கிறார்:

துமிதம் தெறித்து மேலோகம் செல்ல
அமிர்தமென தேவர்கள் வாய் பிளந்தனரே!”

துமிதம் என்றால் திவலைகள் அல்லது துளிகள். அதாவது இராமன் படை அம்புகளை விட்டெறிய, அவை கடலினுள் சென்று நீரின் மீது மோதியதில், நீர் சிதறித் துளிகளாக இந்திரலோகம் வரைக்கும் செனறு தெறித்து, அமிர்தமோ என அங்கிருந்த தேவர்கள் வாய் பிளந்தனர் என்று அந்தக் காட்சியைச் சித்திரத்தை நம் கண் முன் கொணர்கிறார் கம்பர்.

இதைப்போல பலப்பல காட்சிகள் கம்பராமாயண பாடல்களில் வருகின்றன. இவை பாடலா – சித்திரமா என வியக்கும் வண்ணம் உள்ளதல்லவா? கம்ப சித்திரம் மருவி கம்ப சூத்திரமாயிருக்க வாய்ப்புண்டு. மாறாக செய்யுள் இயற்றும் யாப்பு அதாவது இலக்கணத்தையும் சூத்திரம் என்று சொல்லும் ஒரு வழக்குண்டு. கம்பராமாயண பாடல்களிலின் யாப்பை வியந்து, அந்த கடினமான சூத்திரத்தை விஞ்சுவது கடினம் எனும் விளக்கமும் அளிக்கலாம்.

இந்த விளக்கம் ஒன்றும் கம்ப சித்திரமோ அல்லது சூத்திரமோ அல்ல எளிதாக புரியக்கூடியதுதான்!

Natarajanஆ அல்லது Nadarasanஆ?

இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் தமிழர்களில் Nadarasan என்ற பெயர் பரவலாக உள்ளது. தமிழகத்தில் Natarajan என்பதுதான் பிரபலம். இதில் எது சரியான உபயோகம்?

முதலில் பெயரின் மூலகாரணத்தை அறிய முயற்சிப்போம். சிவனின் மூன்று வடிவங்களான யோகம், லிங்கம், ஆடல் ஆகியவற்றில் ஆடல் வடிவம் தான் நடனமாடும் இந்த அழகான உருவத்தின் பெயர். நாணயங்களிலும் அரசு முத்திரைகளிலும் இந்த சிவனின் நடனவடிவம் கற்கால சிந்து நாகரிக காலத்திலேயே இருந்திருந்தாலும், 6-7ஆம் நூற்றாண்டுகளில் குப்த, சாளுக்கிய, பல்லவர் காலங்களில் பாறைசிற்பங்களில் உருமாறத்தொடங்கின. ஆகமங்கள், நடேஸ்வரன் என்று இந்த சிலை வடிவத்தை குறிப்பிடப்பட்டிருப்பதால், வடமொழியில் Nateswar என்று நாட்டியமாடும் ஈசனை குறிப்பிட்டிருக்கவேண்டும்.

ஆனாலும் இந்த சமச்சீரான (symmetrical) அழகிய நடராஜரின் உருவச்சிலை 9-10ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலத்தில்தான் வடிவமைக்க பட்டிருக்கவேண்டும். வெண்கல உலோக வார்ப்பட கலைமுதிர்ச்சியும் இந்த வடிவமைப்புக்கு உதவியிருக்கவேண்டும். எவ்வளவு நுண்ணிய வடிவமைப்பு. வடிவமைத்தவன் ஏனோ தன் பெயரை வரலாற்றில் பதிவிடவில்லை – இந்த காலமாக இருந்தால் காப்புறிமை பெற்று பெரும்பொருள் ஈட்டி இருப்பான்! 8-9 ஆம் நூற்றாண்டு காலத்திய செம்பியன்மாதேவியின் (இவர் மதுராந்தகனின் தாயார் – பொன்னியின் செல்வனில் நடிகை ஜெயசித்ரா – ஞாபகம் இருக்கிறதா?) விருப்பத்தில் உருவான, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோணேரிராஜபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உயரமான வெண்கல நடராஜர் சிலைதான் முதலில் உருவானதோ? சோழர்களின் குலதெய்வமாக நடராஜர் வழிபாடு நடந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் பல நிர்மாணவேலைகள் நடந்திருப்பதால், அங்கு இருக்கும் நடராஜர் சிலையும் கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனாலும் வரலாற்று சான்றுகள் தென்படவில்லை.

அதற்கு முன்பு தேவாரமும், திருவாசகமும் சிவனின் ஆடல் பற்றியும், குறிப்பாய் சிதம்பரத்தின் ஆடல் குறித்து சிலாகிக்கின்றன. நான்காம் திருமுறையில் வரும் தேவாரப்பபாடலில் கூத்தன், ஆடல் அரசன் என தில்லை சிவன் போற்றப்படுகிறான். இது சுமார் 6-7ஆம் நூற்றாண்டு காலமாக இருந்திருக்கலாம். ஆக சிவனின் ஆடல் பழமையான காலம் தொட்டு போற்றப்பட்ட ஒரு மரபு. ஆயினும் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தான் தில்லை கூத்தனை முதல் முறையாக நடராஜன் அல்லது நடராசன் என்று அழைத்தது தான் முதல் வரலாற்று பதிவாக இருக்கலாம். இவர் வாழ்ந்த காலம் 8-9 ஆம் நூற்றாண்டு. இது சிவனை நடராஜன் என அழைக்கும் வழக்கம் அந்த காலகட்டத்தில் பரவலராக இருந்ததை உறுதி செய்கிறது. அந்த வெண்கல சிலை இல்லாத காலகட்டத்தில், சிதம்பரம் கோயிலில் மூலவராக லிங்கத்தை வழிபட்டதாக ஒரு தலவரலாறு குறிப்பிடுகிறது. இந்த சிலைவடிவத்தை கோயிலில் பிரதிஷ்டை செய்தபின் தான் ‘நடராஜர்’ என்ற பெயர் பிரபலமாகி இருக்கவேண்டும். 10ஆம்நூற்றாண்டில் கர்ப்ப கிருகத்தின் மேல்கூறை பராந்தக சோழனால் வேயப்படது. அதில் தொடங்கி நான்கு கோபுரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக 12ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு கிருஷ்ணதேவராயர் காலம் வரை நடந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே நடராஜர் பிரதிஷ்டை 9-10ஆம் நூற்றாண்டு காலத்தி்ல்தான் நடந்திருக்க வேண்டும்.எனவே நடராஜரின் சிலைவடிவத்துக்கு பின்தான் அந்த சொல்லாட்சி வந்திருக்கவேண்டும்.

வடமொழியில் Natan என்றால் நாட்டியம். அதிலிருந்து Nataraj அதாவது king of dance என்ற சொல் உருவாகி இருக்கவேண்டும். 9-10ஆம் நூற்றாண்டு காலங்களுக்கு பின்தான் இந்த பெயர் பிரபலமாகி இருக்கலாம்.

வடமொழி ஆதிக்கம் அதிகம் இருந்த காலத்தவரான தொல்காப்பியர் தமிழின் மேல் உள்ள பற்றாலும் வடமொழி சொறகளின் உபயோகம் புறக்கணிக்க முடியாது என்பதாலும் அந்த சொற்களை தமிழ்ப்படுத்த ஒரு இலக்கணம் வகுத்திருந்தர். அந்த விதி: “வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே”. அதாவது வடசொல்லில் உள்ள ஷ, ஜ, ஹ, க்ஷ, ஶ்ரீ எழுத்துக்களை நீக்கி அவற்றை தமிழ்ப்படுத்தும் முயற்சிக்கு இந்த இலக்கண விதி வழி வகுத்தது. இதன்படி Natarajan என்ற வடசொல் Natarasan ஆவது இந்த இலக்கணப்படி சரியாகும். இதுவே நடனம் (Nadanam) என்ற தமிழ்ச்சொல் மூலமானால் நடனத்துக்கு அரசன், நடராசன் (Nadarasan) என்பதும் சரியே!

எனவே Natarajan என்பது சமஸ்கிருத சொல். அதுவே Natarasan என்பது தொல்காப்பியப்படி தமிழாக்கப்பட்ட வடசொல். Nadarasan என்பது தூய தமிழ் சொல் என்று கொள்ளலாமா?

வெகுநாட்களுக்குமுன் வாணிபத்துக்கு அயல்நாடு சென்ற தமிழர்களுக்கு தமிழ் பாரம்பரியத்தில் பற்று அதிகம். தாய்நாட்டிலிருந்து தொலைவில் இருப்பதால் இது இயற்கையே! ஆதலால், Nadarasan என்ற வடமொழி கலப்பில்லாத தமிழ்ப்பெயரில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால்தானோ இலங்கை, மலேஷிய தமிழிர்களிடம் Nadarasan என்ற பெயர் உபயோகத்தில் உள்ளது என கொள்ளலாம். ஆனாலும் தென்னாட்டில் என்னவோ Natarajan என்பது வழக்கத்தில் தங்கிவிட்டது.

என்னதான் சொல்லுங்கள், அந்த சிலைவடிவத்தின் அழகு ஒரு புறம் இருக்கட்டும். அதனால் பிரபஞ்சத்தின் தத்துவ விளக்கங்களை எடுத்து உறைக்க ஒரு வெளிநாட்டவர்தான் தேவைப்படுகிறது : Fritjof Capra என்ற ஆஸ்ட்ரிய நாட்டவர் எழுதிய The Tao of Physics புத்தகத்தில் இது விரிவாக விளக்கப்பட்டிருப்பது பெரும் வியப்புதான்! அணுக்களுக்குள் துகள்கள் எப்போதும் ஓட்டத்திலேயே இருக்கும் தத்துவத்தை, பிரபஞ்சத்தின் நாட்டியம் (cosmic dance) என இவர் வர்ணிக்கிறார். இந்த விஞ்ஞான உணர்வை சூசகமாக அறிய முடிந்த நம் முன்னோர்களின் இந்த புரிதல் ஒரு வியப்புதான்!

உருவும் சிதைந்து பொருளும் மாறிய சில பழமொழிகள்

தமிழ் மொழியில் மருவி வரும் பழமொழிகள் பல. உதாரணத்துக்கு இங்கு சில….

ஆதாயமில்லாத செட்டி ஆத்தோட போவானா?சோழியன் குடுமி சும்மா ஆடாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்

மேலோட்டமாக பார்க்கும்போது முதலிரண்டும் ஒரே பொருளை குறிப்பது போல் தோன்றவில்லை? ஆதாயமில்லாமல் ஒருவர் காரியம் செய்வாரா என்பதற்குத்தான் உபயோகப்படுகின்றன. ஆனால் இந்த பழமொழிகளின் ஆதாரமே வேறு என்பதுதான் வியப்பு!

ஆதானம் இல்லாத செட்டி ஆற்றோடுதான் போவான்’ என்பதுதான் ஆதாயமில்லாத செட்டி ஆத்தோட போவானா? என மருவிவிட்டது. நாட்டுக்கொட்டை செட்டியார்கள் ஆ தானம் அதாவது பசுமாடு தானம் செய்யதவறக்கூடாது அப்படி தவறினால் ஆற்றோடு ஒன்றுக்கும் பயனில்லாது போவார். தானதர்மம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் பழமொழி இது.

அதேபோல்,

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது’ என்பதுதான் சோழியன் குடுமி சும்மா ஆடாது? என்றாகிவிட்டது. அதாவது சோழநாட்டில் வாழ்ந்த சோழியர்கள் முன்பக்கம் குடுமிவைப்பது ஒரு பண்பாடு.

சும்மாடு என்பது பெண்டிர் தம் தலைமுடியை சுருட்டி உச்சந்தலையில் சுமையை சுமக்க பயன்படுத்துவார்கள். சோழியர்களின் குடுமியை எப்படி சும்மாடாக பயன்படுத்தமுடியும்? இந்த பொருளிள்தான் இந்த பழமொழி உருவானது. எந்த கருவியையும் அதன் உபயோகம் அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் உட்கருத்து.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் என்ற பழமொழியும் கிட்டத்தட்ட அந்த வகைதான். முட்டாளுக்கு அரிய பொருளின் அருமை தெரியாது என்ற வகையில் ப்ரயோகப்படுத்தப்படும் இதன் பொருள் வேறு:

கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்” என்பதுதான் அப்படி மருவியது.

“கழு என்ற ஒரு வகை கோரைப் புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும் போது அந்த புல்லில் இருந்து வரும் கற்பூர வாசனை நமது மூக்குக்கு தெரியும் என்பது தான் இந்த பழமொழியின் அர்த்தம்”.

இந்த கோரைப் புல் கொண்டு தைத்த பாயில் படுக்கும் போது இதில் இருந்து வரும் கற்பூர வாசத்திற்கு தேள், பூரான் மற்றும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் நெருங்காதாம்;

இன்னும் சில:

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலையாம். வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையாம்

இது போக்கு தெரிந்தவனுக்கு, அதாவது திருடர்களின் போக்குவரத்து தெரிந்தவனுக்கு போலீஸ் வேலையும் வாக்கு, அதாவது கல்வி அறிந்தவனுக்கு வாத்தியார் வேலையும் உகந்தது என்பதுதான் அப்படி மருவியது.

புண்பட்ட மனசை புகைவிட்டு ஆத்து

என்பது புண்பட்ட மனசை புகவிட்டு ஆத்து என்பதுதான் மாறியது. அதாவது புண்பட்ட மனசை மனதுக்கு பிடித்த எண்ணங்களில் புகவிட்டு ஆத்து என்று பொருள்.

நல்லமாட்டுக்கு ஒரு சூடு

எப்படி வந்தது தெரியுமா? நல்லமாட்டுக்கு ஒரு சுவடு என்பது தான் ஆதாரம். நல்லமாட்டை கண்டுபிடிக்க அதன் கால் சுவடைவைத்து கண்டுபிடிக்கலாம்.

பழமொழிகள் உருமாறி எப்படி பொருளும் மாறிவிட்டது பாருங்கள்..

Is there another language like Sanskrit?

Have you ever faced an embarrassment when narrating skits, instead of being instantaneously understood and laughed, getting bust when the listener asks for explanation! Poetry is of the same genre and for only quick witted. The task is much more difficult if it is not from one’s mother tongue – it is a Herculean task to detail the nuances. Let me try to do the near impossible!

One classic example of such works in Sanskrit is Seetha Ravana Sampada Jari written by Rama Sastri in 1896. This composition of 100 or so verses is essentially the story of Ramayana but the highlight is conversation between Seetha and Ravana at Asoka Vana. This fascinating scene is choreographed as observed by Hanuman hiding in the trees and narrating it to Rama on his return. This section has 59 slokas of four stanza each. In each sloka the first three lines are by Ravana coaxing Seetha with his greatness and valour and how easily Rama would be defeated in a war. Seetha in the last line would reply by just saying to repeat whatever he said by replacing either with or removing or changing one or two letters or Akshara. The whole meaning would get reversed as one of praise of Rama and chiding Ravana.

Sanskrit as a language has many facets of pliability and one of them is ‘Chitra Kavi’. This is composed as though it is a painting with some interplay of letters or syllables. One way could be that the meaning of one stanza is changed by either omitting or replacing or adding another letter at some appropriate place that could be embedded in the next stanza. English may not be as pliable as this. This could be explained in Tamil as follows:

ரங்கஸ்வாமி என்று ஒருத்தன். ‘ரங்கு’ என்று கூப்பிடுவது. “உன் பேருக்கு முன்னாடி ஒரு ‘கு’ சேர்த்துக்கோ” என்றால்? ஒரு எழுத்தைச் சேர்ப்பதால் அர்த்த விபரீதம்!

அதே போல், “எனக்கு ரொம்ப புத்தி ஜாஸ்தி” என்று ஒருத்தன் சொல்கிறான். இன்னொருத்தன், “ஜா-வுக்குப் பதில் ‘நா’ போட்டுக்கோ!” என்று கிண்டல் பண்ணுகிறான். என்ன ஆகும்? “புத்தி நாஸ்தி” என்றாகிவிடுமல்லவா? நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்றைப் போடுவதில் அர்த்தம் அடியோடு மாறிவிடுவதற்கு இது எடுத்துக்காட்டு.

“ஓம் நமோ நாராயணாய” விலிருந்து ‘ரா’ வை எடுத்துவிட்டால், “ஓம் நமோ நாயணாய” தானே? ‘நாயணாய’ என்றால் ‘மார்க்கமில்லாதவனுக்கு’ என்று அர்த்தம். ‘நாராயணனுக்கு நமஸ்காரம்’ என்றிருப்பதே விபரீதமாக மாறி, ‘வழி தெரியாதவனுக்கு நமஸ்காரம்’ என்றாகிவிடும்! ‘நம: சிவாய’ வில் ‘ம’வை நீக்கிவிட்டால், ‘நசிவாய’ என்றாகிவிடும். ‘சிவனுக்கு இல்லை’ என்ற விபரீத அர்த்தம் ஏற்பட்டுவிடும்! இவை ஒரு எழுத்தை எடுப்பதால் அர்த்தம் மாறுவதற்கு உதாரணங்கள்.

It might be difficult to express the joy when I was fortunate to read and understand some of the slokas. I realised that it is all the more difficult to bring out the beauty of this work in words and share with others!

Enjoy one sample in this video clip.

For those of you who are proficient in Sanskrit can access the full work too.

Continue reading “Is there another language like Sanskrit?”

வள்ளுவனுக்கா இந்த தடுமாற்றம்?

திருவள்ளுவனுக்கு மறுபிறவி சித்தானந்தத்தில் நம்பிக்கை உள்ளதா இல்லையா?

அசைவில்லா நம்பிக்கை உள்ளதற்கு பல எடுத்துக்காட்டுகளை குறளில் காணலாம்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

என்று ‘கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்என்று விதிவலியது என்கிறான்.

அதே  பாங்கில்,

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும் என்ற பொருள்படும்,

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் என்னும்குறள் வாயிலாக தத்தம் கர்மவினைப்படிதான் உலக நிகழ்வுகள் நடந்தேறும் என்றும் ஐயம் ஏதுமின்றி கூறுகிறான்.

இப்படி வடித்த அதே கரங்கள், இந்த விதியை வெல்ல முடியும் என்றும் கோடியிட்டு காட்டுகிறது.

‘சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்’ என்ற பொருள் தரும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்று ஏன் வள்ளுவன் சந்தேகத்துடன் விதிப்பலனை நோக்குகிறான்?

அதே போல், தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்று ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும் என்றும், விதியை மதியால் வெல்லலாம் என அறுதியிட்டும் கூற முடிகிறது.

வள்ளுவனின் பார்வையில், ஊழ் வலியதா அல்லது தத்தம் முயற்சி பெறியதா?

வள்ளுவன் மனதில் உள்ளதை யாராவது திறந்து காட்டுங்களேன்!

Would the Bard of Avon even be able to stand before the Poets of Sanskrit era?

The Shishupala Vadha (शिशुपालवध, is a work of classical Sanskrit poetry composed by Māgha in the 7th or 8th century. It is an epic poem in 20 sargas (cantos) of about 1800 highly ornate stanzas, and is considered one of the five Sanskrit mahakavyas, or “great epics”. It is also known as the Māgha-kāvya after its author. Like other kavyas, it is admired more for its exquisite descriptions and lyrical quality than for any dramatic development of plot.

The entire 16th canto, a message from Shishupala to Krishna, is intentionally ambiguous, and can be interpreted in two ways: one favourable and pleasing (a humble apology in courteous words), the other offensive and harsh (a declaration of war). For instance:


कृतगोपवधूरतेर्घ्नतो
वृषमुग्रे नरकेऽपि संप्रति
प्रतिपत्तिरधःकृतैनसो
जनताभिस्तव साधु वर्ण्यते

which can mean either of:

You delighted the cowherds and their wives by killing Demon Buffalo and cracking down on crime. Now your action against the formidable demon Naraka is winning the enthusiastic approval of the people.

Or

By having sex with the wives of the cowherds you acted criminally and slaughtered justice. Now that your career has hit rock bottom, the people say you got what you deserved.

The 19th canto, especially, like the 15th canto of Kirātārjunīya, contains chitrakavya or decorative composition, with many examples of constrained writing. Its third stanza, for instance, contains only the consonant ‘j’ in the first line, ‘t’ in the second, ‘bh’ in the third, and ‘r’ in the fourth:


जजौजोजाजिजिज्जाजी
तं ततोऽतितताततुत्
भाभोऽभीभाभिभूभाभू
रारारिररिरीररः

“Then the warrior, winner of war, with his heroic valour, the subduer of the extremely arrogant beings, he who has the brilliance of stars, he who has the brilliance of the vanquisher of fearless elephants, the enemy seated on a chariot, began to fight.”

He progresses to just two consonants in the 66th stanza:

भूरिभिर्भारिभिर्भीराभूभारैरभिरेभिरे
भेरीरेभिभिरभ्राभैरभीरुभिरिभैरिभाः

“The fearless elephant, who was like a burden to the earth because of its weight, whose sound was like a kettle-drum, and who was like a dark cloud, attacked the enemy elephant.”

By the 114th stanza, this is taken to an extreme, with a celebrated example involving just one consonant:

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः

“Sri Krishna, the giver of every boon, the scourge of the evil-minded, the purifier, the one whose arms can annihilate the wicked who cause suffering to others, shot his pain-causing arrow at the enemy.”

The same canto also contains increasingly ingenious palindromes. The 44th stanza, for instance, has each line a palindrome:

वारणागगभीरा सा साराभीगगणारवा
कारितारिवधा सेना नासेधा वारितारिका

“It is very difficult to face this army which is endowed with elephants as big as mountains. This is a very great army and the shouting of frightened people is heard. It has slain its enemies.”

The 88th stanza is a palindrome as a whole (syllable-for-syllable), with the second half being the first half reversed. This is known as pratiloma (or gatapratyāgata) and is not found in Bharavi:

तं श्रिया घनयानस्तरुचा सारतया तया
यातया तरसा चारुस्तनयानघया श्रितं

The 34th stanza is the 33rd stanza written backwards, with a different meaning. Finally, the 27th stanza is an example of what has been called “the most complex and exquisite type of palindrome ever invented”. It may also be thought of as a syllabic Sator Square. Sanskrit aestheticians call it sarvatobhadra, “perfect in every direction” — it yields the same text if read forwards, backwards, down, or up:

सकारनानारकास
कायसाददसायका
रसाहवा वाहसार
नादवाददवादना

“[That army], which relished battle (rasāhavā) contained allies who brought low the bodes and gaits of their various striving enemies and in it the cries of the best of mounts contended with musical instruments.


सा सेना गमनारम्भे
रसेनासीदनारता
तारनादजनामत्त
धीरनागमनामया

The 29th stanza can be arranged into the shape of a “drum” (muraja-citra):

The first, second, third, and fourth lines give the same text when read along a “drum” pattern.

“That army was very efficient and as it moved, the warrior heroes were very alert and did their duties with great concentration. The soldiers in the army made a loud sound. The army was adorned with intoxicated and restive elephants. No one was there with any thought of pain.”

In the 118th stanza, each half contains the same pāda twice, but with different meanings. This is known as samudga:

सदैव संपन्नवपू रणेषु
दैवसंपन्नवपूरणेषु
महो दधेस्तारि महानितान्तं
महोदधेस्तारिमहा नितान्तम्

Illustration of cakrabandha constraints, with hidden message. The canto also includes stanzas which can be arranged into the shape of a sword, zigzags, and other shapes.

Finally, it ends with a stanza (120th) in the extremely difficult “wheel design” known as cakra-vṛtta or cakrabandha, wherein the syllables can be arranged in the form of a wheel with six spokes.

सत्वं मानविशिष्टमाजिरभसादालम्ब्य भव्यः पुरो
लब्धाघक्षयशुद्धिरुद्धरतरश्रीवत्सभूमिर्मुदा
मुक्त्वा काममपास्तभीः परमृगव्याधः नादं हरे
रेकौघैः समकालमभ्रमुदयी रोपैस्तदा तस्तरे

In the figure, the first, second and third lines are read top-to-bottom along the “spokes” of the wheel, sharing a common central syllable, while the fourth line is read clockwise around the circumference (starting and ending where the third line ends), sharing every third syllable with one of the first three lines. Further, the large syllables in bold (within the annuli), read clockwise, spell out śiśupālavadha-māgha-kāvyamidaṃ (“This is Śiśupālavadha, a poem by Māgha”).

One may say that English is not amenable to such word plays that Sanskrit affords, but still, the contribution to literature by many of the great Sanskrit poets such as, Kalidasa, Bharavi, Agasthya Kavi, Sharan, Magha and others are indeed of great quality. It is a pity that the literary world is not conscious enough to their contributions.

மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் தமிழ்க் கவித்தொகுப்பு (Palindrome)

சங்ககால தமிழில் இருவழியொக்கும் அதாவது Palindrome கவித்தொகுப்பு அரிது. இது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே அமைக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர் ஆகும். திருஞானசம்பந்தர் அருளிய மூன்றாம் திருமுறையில் சீர்காழி திருப்பதியில் உறைந்திருக்கும் ஈசனைத்துதித்து பாடிய பதிகங்கள் அனைத்தும் அவ்வகையில் அமைந்துள்ளதை அறியும்போது ஏற்படும் உவகை அளவில்லாது இயல்பன்றோ?

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணாவண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள் வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத்துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக் கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையா ல் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப்பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள்புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களை கடைக் கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மயுரிவே

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ளதிருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

இந்த தேவாரப்பதிகத்தை ஓதுவதை (1) காணொலியிலும் அனுபவிக்கலாம்.

இதே போன்ற palindrome தொகுப்புகள் Sanskrit காவியங்களில் ப்ரசித்தம். அதில் ஒன்றை என்னுடைய வேறு பதிவில் (2) காணலாம்.

1.https://youtu.be/wEt3BJdWfIo

2. https://nattuspage.home.blog/2019/02/06/vilomakavyam-a-complex-palindrome-in-sanskrit-literature/

முடியாத முடிவுகளுக்கு எல்லையே இல்லை

அந்த நாளும் ஞாபகம் வந்ததே…

அப்போதெல்லாம் பள்ளியில் citizenship class என ஒரு period இருக்கும். நஈன் சொல்வது சமார் ஐம்பது வருடங்களுக்கு முன். அதில் சொல்லிக்கொடுத்த பாடல், ஒரு நாள் ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்தது. முதல் வரிமட்டும் தான். மீதி வலைதளத்தில் தான். கூகுளுக்கு ஒரு J.

இதோ அந்த அழகான நாடோடி பாடல். ‘நக்கல்’ ரொம்ப தான். முடியாத முடிவுகளுக்கும் எல்லையே இல்லையோ – இந்த பாடலில் தளும்பும் தமிழனின் நகைச்சுவை உணர்வுக்கும் தான்! இதோ.. அந்த பாடல்…..

“முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் நொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே

இதுலயே இனனுமொரு versionஉம் உண்டு…

“முள்ளு முனையிலே மூணு குளம் வெட்னேன்
ரெண்டு குளம் பாழு;ஒண்ணுல தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணு வெட்ட மூணு பேரு.
ரெண்டு பேர் நொண்டி-ஒத்தனுக்கு கையே இல்லை.
கையில்லாத குசவன் செஞ்ச பானை மூணு. ரெண்டு பானை பச்சை-ஒண்ணு வேகவேயில்லை. வேகாத சோத்துக்கு விருந்தாளி மூணு பேரு, ரெண்டு பேரு பட்ணி ஒத்தன் உண்ணவே இல்ல. உண்ணாதவன் கட்ன கோவில் மூணு கோவில், ரெண்டு கோவில் பாழ், ஒண்ல சாமியே இல்ல. சாமி இல்லா கோவிலுக்கு ஆட வந்தவ மூணு பேரு, ரெண்டு பேரு மொட்டை, ஒத்திக்கு மயிரே இல்ல…”

என்வயதிய ‘இளைஞர்களில்’ எத்தனை பேருக்கு இந்த நாட்டுப்பாடல் நினைவுக்கு வந்ததோ தெரியவில்லை….

ஹும்……. இந்தகால குழந்தைகள் தமிழைப்படிப்பதும் இல்லை. அனுபவிப்பதும் இல்லை. பழைய தமிழ் திரைப்பட பாடல்களைக்கூட ஏதோ ஒரு வகையில் சேர்க்கலாம்.. ஆனால் இந்த காலத்திய….. அவை தமிழிலேயே இல்லை என்றால் இன்றைய கவிஞர்களுக்கு மூக்கின்மேல்(?) கோபம் வரும். Twitterஇல் விரட்டி மிரட்டுவார்கள்.

இந்த கால பெற்றோர்களிலும், தங்கள் குழந்தைகள் தமிழைப்படிப்பதை கௌரவக்குறைவாக நினப்பவர்கள் தான் அதிகம்.

சொல்லில் சிலம்பமாடும் காளமேகம்

இலக்கியங்களில் சிலேடை என்பது ஒரு அலங்காரம். ஒரு பொருள் தரும் சொல் வேறு ஒரு பொருளையும் மறைமுகமாய்க் குறிக்குமானால் அது சிலேடை ஆகும். சிலேடை நயத்துடன் எழுதப்படும் கவிகள் அந்தக்காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்டதுடன், புகழ் பெற்றும் விளங்கியது.

வடமொழி சமஸ்கிருதத்தில் காளிதாஸின் சிலேடைநயம் வெகு பிரசித்தம். தமிழில் சிலேடையாகவும், நையாண்டியாகவும் பாடுவதில் சிறந்து விளங்கியவர் கவி காளமேகப் புலவர். அவரது சில சிலேடைகளை இங்கு ருசிக்கலாமா?

தகர” வருக்கமே முற்றவும் அமைந்து வருமாறு அமைந்த  பாடல் இது. உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தித் தாது ஊதுதி – தாவிச் சென்று (தாது=பூவின் மகரந்தம்) பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்;

தாது ஊதித் தத்துதி – மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய்

துத்தித் துதைதி – துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்

துதைது அத்தா ஊதி – அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்

தித்தித்த தித்தித்த தாதெது – இரண்டிலும் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது?

தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது – தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?

இந்தப் பாடலில் “தாது” என்னும் சொல் “மகரந்தம்”, “பூ”, “பூவின் இதழ்” ஆகிய  மூன்றையும் குறிப்பிடுகிறது

வண்டைப் பார்த்துப் பாடும் விதமாக அமைந்தது இந்தப் பாடல். தத்தித் தாவி பூவில் (மலரில்) இருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே! (நீ) ஒரு பூவினுள் (மலரினுள்) உள்ள தாதுவை உண்ட பின்பு மீண்டும் மற்றொரு பூவிற்குச் சென்று தாதெடுத்து (மகரந்தத்தை எடுத்து) உண்கிறாய். வண்டே உனக்கு எந்தப் பூவில் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது)? இதுவே  பாடல் விளக்கம்.

மகரவரிசையிலும் ஒன்று:

மானமே நண்ணா மணமென் மனமென்னும

மானமான் மன்னா நனிநாணு – மீனமா

மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்

மானா மணிமேனி மான்

மானம் மான் மன்னா – பெரிய யானைகளையுடைய வேந்தனே!, ஆனா மினல் மின்னி – நீங்காது மின்னானது விளங்கி, முன் முன்னே நண்ணினும் – முன்னே முன்னே தோன்றினும்,மானா மணி மேனி – ஒவ்வாத அழகிய உருவத்தையுடைய, மான் – மானை யொப்பாள், மானமே நண்ணா மனம் – மானம் யாதும் மேவாத உள்ளம், என் மனம் என்னும் – எனது உள்ளம் என்னும்; நனி நாணும் – மிகவும் நாணும் குறைபடா நிற்கும்; ஈனமாம் – (ஆதலால், நீ இதுவரை வரைந்து கொள்ளா திருத்தல் நினது பெருமைக்குக்) குறைபாடாகும.

ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க” என்று கேட்டவருக்கு விடையாக இந்த பாடல். மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ உளறுவதைப்போலத்தான் இந்தப் பாடலும் தோன்றும்.. சொற்களைப் பிரித்து, பொருள் கண்டு படித்தால் தமிழின் சுவையில் உள்ளமெல்லாம் இனிக்கும்..

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

“காக்கைக்கு ஆகா கூகை – இரவில் காக்கையால் கூகையை (ஒரு வகை ஆந்தையை) வெல்ல இயலாது. கூகைக்கு ஆகா காக்கை -பகலில் கூகையால் காக்கையை வெல்ல முடியாது. கோக்கு கூ காக்கைக்கு (கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு; கூ = புவி; காக்கைக்கு = காப்பதற்கு) – (அதனால்) மன்னனுக்கு அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுவதற்கு; கொக்கொக்க = கொக்கு ஒக்க – கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும், கைக்கைக்கு – பகையை எதிர்த்து, காக்கைக்கு காப்பாற்றுவதற்கு, கைக்கைக்கா கா = கைக்கு ஐக்கு ஆகா (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்”

கவியரசரின் அத்திக்காய் ஆலங்காய் பாடலுக்கு இதுதான் முன்னோட்டமோ?

இக்கால கவிஞர்களும் இவ்வகையில் சளைத்தவர்கள் அல்ல. தமிழ்த்திரைப்பாடல்களில் சிலேடையை புகுத்திய கவிஞர்களில் முன்னோடி கண்ணதாசன்.

பலே பாண்டியா படத்தில் அத்திக்காய் காய் காய், வீர அபிமன்யு படத்தில் பார்த்தேன் சிரித்தேன், ரகசிய போலீஸ் 115 படத்தில் பால் தமிழ் பால் என்று பாடல்களில் முறையே காய், தேன் பால் என்ற சொற்களைக்கொண்டு  சொல் சிலம்பம் ஆடி மகிழ வைக்கிறார் கவியரசு.

நமது இந்நாள் பாடதிட்டத்தில் ஏன் தமிழை சுவைக்க கற்றுத்தருவதில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு கேள்வி:

’கரம் வேறு மொழிக்களில் இல்லாத காரணம் என்னை வெகு நாட்களாகவே துளைக்கிறது. நண்பர்களிடம் விடை இருந்தால் பகிரலாமே.

’ உச்சரிக்க இயலாத தமிழ் நாக்குகளுக்கு என்ன தண்டனை தரலாம்?