நாளை என்பது கனவாகலாமோ?

இரவு படுக்கையில் எப்போதும் போல் phoneஇல் மேய்ந்து கொண்டிருந்தேன். எங்கள் Engineering நண்பர்கள் வாட்ஸ்ஆப் group இல், நண்பன் ராமநாதன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்திருந்தான் ‘தினமும் walking போகாமல் இருந்தால் இதயநோய் உண்டோ இல்லையோ, ஒரு பெரிய தலைமுதல் கால் வரை வியாதி லிஸ்ட் கொடுத்து அதில் ஏதோ ஒன்றாவது நிச்சயம்’ என்பதுதான் அது. ஏதோ நம்ப குப்பனோ -சுப்பனோ – பாட்டியோ சொன்னால் நம்ப மாட்டோம்னு பெரிய வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கோள் காட்டி இருந்தது அந்த தகவல்.

பதவி ஓய்வு பெற்ற பிறகு அந்த அளவு நடக்கவில்லயோ? உடனே மனதுக்குள் ஒரு resolution, நாளை முதல் காலை பால் வாங்க போகும்போது ரெண்டு தெருவாவது சுற்ற வேண்டும்.
‘பனியாக இருக்கு, கொஞ்சம் லேட்டாதான் போகலாமோ? நோ…நோ… உடம்பு ஆரோக்கியம்தான் முக்கியம்’. பையைமாட்டிக்கொண்டு மில்க் பூத்தில் பால் பாக்கெட்கள் வாங்கி, அப்படியே தூரத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப்போய் பேப்பர் வாங்கி மெதுவாக நடந்து வந்ததில் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. முதல்நாள் இது போதும். ஒரு தீர்மானத்துடன் நடை கட்டி வீடு திரும்பினேன்.
தெருமுனையிலிருந்து மெதுவாக வீட்டுப்பக்கம் திரும்பினால் ‘என்ன ஆயிற்று? வீட்டில் கூட்டம். பதட்டத்தோடு நுழைந்தால் பெட்டில் நான் கண்ணை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். ஆனால் ஏன் டாக்டர் பல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்? ஏன் ‘ஆம்புலன்ஸ் call பண்ணுங்கள்’ என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் வாங்கி வருவதற்குள் இவ்வளவு களேபரமா? ஒரு doubt? நான்தான் பால் வாங்கி வந்தேன் என்றால் படுக்கையில் இருப்பது யார்? கண்ணாடியில் போய் பார்க்கலாம், அப்போது தெரியும் நான் நான்தானான்னு…oh my god… கண்ணாடியில் ஏன் என் முகம் தெரியவில்லை? ஐயோ … நான் ஆவி ஆகி விட்டேனா? Wife கிட்டக்க password எல்லாம் எங்க store பண்ணியிருக்கேன்னு சொல்லலையே? அவ்வளவு பணமும் ஸ்வாஹாவா?
‘அப்பா இப்படித்தான்மா… எப்பவுமே ஒழுங்கா ஒரு காரியமும் பண்றதில்ல’. பெண் சொல்லப்போவது இப்போதே காதில் கேட்கிறது. ‘அப்பா நீ எப்பவும் எல்லாத்தையும் இப்படி கரெக்டா செய்யறே… அம்மா மட்டும் எப்படிப்பா?’ அப்படின்னு சொன்ன பொண்ணா இது?


‘மணி ஏழரை ஆறது. இன்னும் என்ன தூக்கம்? பால் வாங்கிண்டு வாங்கோ?’ திடுக்குன்னது.. அப்ப நான் இன்னும் சாகலையா? போனதெல்லாம் கனவா? Thank god….there is no crowd, no doctor, no ambulance either… பால் பை எங்கே?
Walking…. ஊகும். இன்னிக்கு வேண்டாம், நாளைலேர்ந்து நிச்சயம் வாக்கிங் உண்டு.
சாரி ராமநாதா!

வஞ்ச புகழ்ச்சியில் இது ஒரு உச்சம்

கோயில்களுக்கு சென்று இறைவனிடம் நோய்தீர வேண்டுபவர் யாரில்லை? ஆனால் இறைவனுக்கு அந்த சக்தி இல்லை என கவி காளமேகத்தினால் மட்டுமே சாதிக்க முடியும்! அவரின் கூற்றுப்படி தன் குடும்பத்தினரையே குணப்படுத்த இயலாத அவனால் மற்றவரை எப்படி குணப்படுத்த முடியம்! அவரின் சந்தேகத்துக்கான காரணங்களை கோடிட்டு காட்டி இயற்றிய அந்த பாடல் இதோ!

வாதக்காலாம் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் போதப் பெருவயிறாம் புத்திரர்க்குமாதரையில் வந்தவினை தீர்க்க வகையறியான் வேளூரான் எந்தவினை தீர்த்தான் இவன்?

நடனடமாடுவதால் தமக்கே காலில் வாதம், மைத்துனருக்கோ நீரிழிவால் படுக்கை, மைந்தன் கணபதிக்கு பெருத்த வயிறு, இப்படி தன் குடும்பத்தனரின் நோயையே தீர்க்கமுடியாதவனா என் வினையைத்தீர்க்கப்போகிறான்? ஈசனை எப்படித்தான் ஏளனம் செய்யகிறார் இந்த காளமேகம். இப்படி ஏகத்துக்கும் வந்திப்பதால் இறைவன் பயந்து வந்து தம்மை அருளுவான் என்பது இவர் எண்ணமோ?

இதே தோரணையில், ஈசனை பார்த்து ‘ஐயோ உனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை; நீ ஒரு அனாதை; அதனால் நீ பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை; பாவமய்யா நீர்’ என ஈசனை பரிதாபத்துடன் கேட்பதாக கவிஞர் பொன்னையா பிள்ளை இயற்றியது கீழ் வரும் பாடல்! தாய் தந்தை இல்லாமல், தானே துன்பப்படும் அவன் எப்படி தன்னைக்காக்க முடியும் என சந்தேகிக்கிறாரோ இவர் என்று தோன்றுகிறது!

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா பெற்ற (தந்தை தாய்)

அந்தமிகுந்த ஸ்ரீ அம்பலவாணரே அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)

கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும் வில்லால் ஒருவன் அடிக்க கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க அந்த வேளை யாரை நினைந்தீரோ அய்யா பெற்ற (தந்தை தாய்)

உலகில் எல்லா உயிருக்கும் அம்மையாகவும் அப்பனாகவும் இருக்கும் இந்த ஈசனையே இப்படி பாடுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் இந்த கவிக்கு?

பள்ளிகொண்ட பெருமாளை அருணாசல கவிராயர் பாடிய கீழ் வரும் பாடலும் இதே வகையை சேர்ந்ததுதான். ஏன் இப்படி களைத்து படுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு காரணங்கள் பல காட்டும் இவர், ஓய்வில் இருக்கும் பெருமாள் தம்மை காப்பாரோ என சந்தேக்கிறாரோ என தோன்றுகிறது!

ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)

ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)

கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ? அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ? பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)

மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ? (ஏன்)

படி தனிலே மெத்தவும் நானே உம்மை பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத் துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!மடுவில் ஆனை முன் ஓடி முதலையை மடித்து ரக்ஷித்தீரே அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும் தாரும் என் சாமி வக்ஷமேவும்
மஹாலஷ்மியுடன் பெரும் பஷமாக என்னை ரஷிக்க எழுந்திரும்

உலகையே காக்கும் கடவுள் ஓய்வெடுக்கிறார் என்பதை சாதித்து விட்டு யாரிடம் தஞ்சமடைய உத்தேசித்திருக்கிறாரோ இந்த அருணாசல கவிராயர் ?

கவிகள் இப்படி சளைக்காமல் ஒருவரை ஒருவர் விஞ்சும் வண்ணம் இறைவனை வந்தித்து வஞ்சப்புகழ்ச்சி வகையில் அமைத்த இந்த பாடல்களின் நயங்களை அனுபவிப்பதுடன், கவிக்குயில்கள் குரலில் கேட்டு சுவைப்பதும் ஒரு இன்பம்தானே?

Slip of the tongue or Freudian slips?

A slip of the tongue is not abnormal in common walk of life. You may want to say “I’m glad you’re here,” but what came out may be: “I’m mad you’re here.” Celebrities such as Ronald Reagan, are notorious for these slips even with written ‘slips’ prompting them: As president, sometimes he veered from his carefully written speeches with disastrous results. In 1988, when trying to quote John Adams, who said, “Facts are stubborn things,” Reagan slipped and said, “Facts are stupid things.”

Without having written slips, there are even more hilarious instances: When confrontations between protesters and police turned violent, Daley’s blooper comment reflected the opinion of many people: “The police are not here to create disorder, they’re here to preserve disorder.” While closing a congressional session, Lewis’s real feelings about his peers slipped out when he said, “I want to thank each and every one of you for having extinguished yourselves this session.” Spiro Theodore Agnew served as vice president from 1969 to 1973 under President Nixon, before resigning following evidence of tax evasion. This slip expressed his true feelings on this matter: “I apologize for lying to you. I promise I won’t deceive you except in matters of this sort.”

But when these ‘slips’ reveal some unconscious aspect of the mind, it is known as ‘Freudian’ Slip. Sometimes it is extremely difficult to decipher the difference!

For instance if your girl friend asks, ‘What would you like—bread and butter, or cake?’ You may reply ‘unconsciously ‘Bed and butter.’ Such slips by ludicrous politicians are even more interesting: During a televised speech on education, Senator Ted Kennedy meant to say that “Our national interest ought to be to encourage the best and brightest.” Instead, Kennedy accidentally said “breast” – his hands even cupping the air as he said the word. While he quickly corrected his gaffe and continued, the slip of the tongue seemed revealing considering his hand gestures and the family’s reputation for womanizing. At a Washington D.C. dinner party, Condoleezza Rice, then National Security Advisor to President Bush stated, “As I was telling my husb—as I was telling President Bush.” The Freudian slip seemed to reveal perhaps some hidden feelings the unmarried Rice might hold toward her boss. When actress Amanda Seyfried appeared on the Today show to promote the film Ted 2, announcer Willie Geist accidentally described her as “titsy” rather than “ditzy.” Besides simply being an amusing slip, the comment perhaps revealed what was really on his mind. While campaigning in 1988, Bush described serving as Ronald Reagan’s vice president this way: “For seven and a half years I’ve worked alongside President Reagan. We’ve had triumphs. Made some mistakes. We’ve had some sex . . . uh . . . setbacks.” When it comes to presidents 41 and 43, you could say that the slip doesn’t fall far from the tongue.

Some slips of the tongues in the local languages are very exhilarating but can’t be translated without losing their hidden flavour. Look at the utterances of a leader of the most popular Indian political party, DMK, Stalin, in Tamil. They are worth their value in gold. Here are some of his public utterances:

‘‘யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே..’’ என பழமொழியை பக்குவமாக சொதப்பினார்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று கூறுவதற்கு பதிலாக….

ஆட்டுக்கு தாடியும், மாட்டுக்கு கவர்னரும் என்று தத்துவார்த்தமாக முழங்கினார்.

மதில் மேல் பூனையாக என்ற பழமொழியை பூனை மேல் மதில் போல என்றும்,

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக லாரியில் தண்ணீரை ஏற்றி என்று கூறுவதற்கு பதிலாக ‘‘தண்ணீர் மீது லாரியை ஏற்றி…’’ என்றும் உளறினார்.

இதற்கெல்லாம் மேலாக…. கஜா புயலை, கஜா முயல் என்று முழங்கியதை இப்போது நினைத்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது.

சனாதனத்தை வேரறுப்போம் என்ன முழக்கத்துடன் திமுக கூட்டணி கட்சி ஒன்று மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், சனாதனம் என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியாமல், ‘‘சதசதானத்தை வேரறுப்போம்’’ என்று முழங்கிய போது, மேடையில் இருந்த தலைவர்கள் எல்லாம் சனாதனத்தை ஸ்டாலின் இவ்வளவு ஈசியாக கொலை செய்து அழித்து விட்டாரே என்று அதிர்ந்து விட்டனர்.

பெயர்களை உச்சரிப்பதில் கூட….

அருண் ஜேட்லி – அருண் ஜட்டி,

சித்திரவதைகள் – சித்திரைகள்

சாகித்ய அகாடமி விருது – சாதித்திய விருது என்றெல்லாம் பேசி மக்களை உற்சாகப்படுத்தினார்.

அதுமட்டுமல்ல… முதலில் கலவரத்தை அடக்க வேண்டும் என்பதற்கு பதிலாக “முதலில் கலவரத்தை நடத்தணும்’’ என்று கூறி கேட்பவர்களுக்கு பீதியூட்டினார்.

‘‘ தமிழகத்தில் சங்கிலி பறிப்பு, தாலி அறுப்பு’’ நடக்கிறது என்பதை ‘‘சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு’’ என்று கூறி பார்வையாளர்கள் அனைவரையும் தலை சுற்ற வைத்தார்.

For some other leaders, slip of the tongue exposes their ‘natural‘ stupidity as well. Classic example is that of Rahul Gandhi. Among the many quotes attributed to him, here are few samples:

Talking to people in Firozabad, Rahul said: “You all are demanding a potato factory in your area, but you should understand I am an opposition leader. I cannot open a potato factory“. A slip of tongue, abound in almost all of his speeches, landed him in trouble here as what he meant to say was factory of potato chips and not ‘potato factory‘.

Addressing the students at Narsee Monjee Institute of Management Studies in Mumbai, Rahul said, “One day you’re going to run this country, run the institutions, you will be the Steve Jobs in the Microsofts and the leaders…the Facebooks of this country.” We don’t know if it was a slip of tongue or Rahul really didn’t know that Steve Jobs is not from Microsoft.

There is no dearth for humour as long as politicians are around…??

காபி போடுவது என்ன கம்ப சூத்திரமோ?

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாகஇருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பிஎதிர்பார்த்துக் காத்திருந்தேன். ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது…மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்குமேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்பஎல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத்தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம்என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும். மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள்கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடி பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டி வைப்பதில்லை. ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.

காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்குவிஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும்.சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டி வகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும். அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?)ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம்பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும் போலாகிவிட்டது. நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள்தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப் போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடிபாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும்.

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…

ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக்கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச்சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மாஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப் போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில்சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலிஉறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம். ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக் குடித்துவிட்டு அவளுக்கும் தர வேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டுசேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது. மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கிஅமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது. ”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க்கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதைமறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்த பாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக் கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்திசக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக்கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக் கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடிதுணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து ‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டு கால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப்பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.

செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்குதிரும்புவதற்குள், ‘தூ தூ… என்று மனைவியின் கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

”எதை?”

”என் தலையை!” மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரைஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது.மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் – வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.

அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை… ”இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்குஇரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன் அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன்பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போட முறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேலஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்….ஹஹஹாஹ்

வலைதளத்தில் சிக்கிய ஒரு சககுடும்பஸ்தனின் குமுறலை பகிர்தலின் மகிழ்விற்கு ஓர் எல்லையுமுண்டோ?

Decoding Atoms – A Vedic Approach

There is no unravelling of the fundamental particle ‘Atom‘ without invoking the blessings of the ancient sage from Dwaraka, Gujarat Acharya Kanad, popularly known as Maha Rishi Kashyap, who propounded the atomic theory 2600 years before the westerner, John Dalton did. Ours is a great nation with scholars who did yeoman service to the knowledge and wisdom which are scripted in our vedas, that are long forgotten due to the intervening dark era of the last couple of centuries.

While the research and development of atomic energy in the strategic sector has no doubt fortified our borders, it is appropriate now to direct the research programs for the betterment of ‘Aam Aadhmi’. For example, why not develop a palm sized mini reactor that can power say a torch or a smart phone or even cooking stoves? This can be integrated with the revolutionary skill development programme, so that the aspiring youth, can start assembling these mini reactors.

For over years only the use of light water and heavy water in the reactors have been studied. How about the use of Ganga water? It is possible that it would not get activated due to its ‘holy power’.  Under the ‘Namami Ganga’  programme, the government has ear marked significant funding on Ganga Jal research. U.P. Government has MoUs with BHU and a number of other institutions to find out what is so special about gangawater. In the next meeting of Indian Science Mela (DST has been advised to delete the word Congress!), there would be a special two day session devoted only to this topic.

Now on the nagging problem of nuclear wastes: it is worthwhile to evaluate the use of cowdung as a matrix for immobilizing the waste. It is a unique material, it contains organic, inorganic, glass, plastic, paper and what not.   The sand that goes along with the grass, has Silicates that gets softened by the thermal and bioenergy of the cows’ huge bowels. If one carefully studies the ancient scriptures, it might give leads on the research. It is possible that the Nuclear wastes would get easily immobilized in this ‘wonder material’ cowdung.  These nuclear waste management plants can even be co-located with gaushalas (of course with due approvals from the regulator AERB). Also the potential application of cows’ urine for nuclear fission and fusion that has not yet been explored adequately.

There has been huge outcry regarding the difficulties faced by the people in getting treatment under the swachatha programme. Major bottleneck seems to be the payment for diagnostic procedures at the hospitals. The developments n his sector can come from your sister department ECIL, that has supplied fantastic EVM machines to the country. ECIL can come out with an ADM machine that will be more like an ATM. Just get into the booth, look at the computer screen; feed your aadhar number, code number for the organ, code number for type of scan, xray or CT or PET and code number for the hospital. The ADM transfers instantly the data directly to the hospital as well as to all the insurance companies. By the time you reach home you would have received your medicines from Baba’s ‘aushadalaya’.  This is the digital India one should strive for.

It is apt at this point to portray the program to represent the ethos of the majority of the Indian population. For example, when our brilliant scientists successfully exploded a nuclear bomb at Pokharan, do you know what was the code that was used to convey the success of the nuclear test: “Buddha smiled” This shows the mindset of the people at that time. Are there not enough Hindu gods? Why not “Shiva danced” or “Hanuman jumped” as it would bestow the divine blessings for the betterment of the nation apart from rekindling the world’s attention to our great religion.

The synergic research of atoms from both the vedas and our scientific institutions would contribute to the ‘vignan of Paramanu’ reaching the poor man’s dwellings. This would leapfrog our great nation to reach greater pace of progress and foster national harmony.

One last word of caution for those optimists who haven’t got the thread of the genre in the above list of possibilities and are still in serious pursuit of decoding atoms through Vedic literature: It would pay dividends and guarantee prosperity to our great country, only if you live in the present which Is ‘Real’ rather than the ‘illusive glorious past’ frittering away the valuable time talking about it! kindly bear in mind that even long after the asafoetida is exhausted, the empty container would smell that great spice!

For heavens sake, leave the science exploration to the specialists and not to the pundits.

Credit:

1. Personal communication with my respected learned colleague of DAE, Shri A R Sundar Rajan

கம்பராமாயணத்தில் ஒரு ‘கரெக்‌ஷன்’

தோல்வியின் விளிம்பில் இருந்த ராவணனின் மனநிலையை, ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்‘ என்று ஒப்பிட்ட கம்பனின் கூற்று இன்றைய காலத்திற்கு ஏற்புடையதன்று, இது, தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் இந்த கால கட்டத்தில், ஊதாரியை பணத்தை ‘தண்ணீர்’ போல் செலவழிக்கிறான் என்பது போலத்தான்.

இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள் (வங்கிகள்) தான் கலக்கத்தில் உள்ளனர். இப்போதுமட்டும் கம்பன் ராமாயண காவியம் எழுதினால் கடன் தந்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்‘ என்று மாற்றி எழுதுவது நிச்சயம்.

கடன் ஒரு சுவாரஸ்யமான விஷயம். வர்த்தகத்துக்கு பண்டமாற்று முறைதான் வெகு காலமாக இருந்ததாகவும், ஏசு பிறப்பதற்கு சுமார் 2000 வருடங்குக்கு முன்புதான் வெள்ளி நாணயங்களுக்கு பண்டங்கள் விற்கும் வாங்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததாக வரலாறு. கடன் கொடுத்து பணம் குட்டி போடும் ‘வட்டி’த்தொழில் இதன் தொடராக வந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. 14, 15 வது நூற்றாண்டுகளிலெல்லாம், ப்ரானஸ், இத்தாலிய நாடுகளில் தனியார் வட்டித்தொழில் கொடிகட்டிப் பறந்ததாகவும் அதற்கு பின்தான் வங்கிகள் தொடங்கப் பட்டதாகவும் ஒரு தகவல் சொல்கிறது. ஷேக்ஸ்பியரின் ‘மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ்’ஸில் கடனைத்திருப்பித்தர முடியாத அன்டோனியோவிடம் அதற்கு ஈடாக, அவனுடைய சதையைக்கேட்கும் ஷைலாக்கின் ஞாபகம் வருகிறதா? எல்லா வட்டிக் கடைக்கார்ர்களும் ஷைலாக் போலிருந்தால் கடன் வாங்கத்தோன்றுமா?

ஆனால் இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. புதிய தொழில் தொடங்க ஒருவரும் தன்னுடைய பணத்தை முழுவதுமாக முதலீடு செய்யும் அளவிற்கு முட்டாள்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐந்தில் ஒரு பங்கு இருந்தால் கூட போதும், மீதி நான்கை இந்த நவீனகாலத்தைய வட்டிக்கடைகார்ர்களான வங்கிகளில் கடன் வாங்க முடியும். ஒரு சில நாடுகளில் ஏழில் ஒன்று கூட போதும் என்கிறார்கள். நான்கைந்து வருடங்களில் தொழில் தழைத்து வரும் வருமானத்தில் கடனை அடைத்துவிடலாம். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், அந்த தொழிலை மூடிவிடலாம். வங்கிகள், கடனில் வாங்கிய கருவிகள், மற்றும் சொத்துக்களை கைய்யகப்படுத்தி, கொடுத்த கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்வார்கள். தொழில் தொடங்கியவர்களின் மற்ற சொத்துகளை வங்கிகள் தொடமுடியாது. இந்த வகையில் சில ‘வாரா கடன்கள்‘ ஆனாலும் மற்ற தொழில் முயற்சிகள் பலவும் வெற்றிகரமாக ஓடியதால், மொத்தத்தில் வங்கிகள் முடங்காமல் லாபம் ஈட்டின. இந்த நடைமுறை வந்தபின் பலர் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி அதிகமாக ஈடுபட்டதாகவும் அதனால் பொருளாதாரம் இந்த நூற்றாண்டில் அதீத வளர்ச்சி அடைந்ததாகவும் நிபுணர்கள் சத்தியம் செய்கிறார்கள்.

ஆனாலும், தகிடு த்த்தம் செய்து குறுக்கு வழியில் விறைவாக பணக்கார்ர்களாக விழைந்த ஒரு சில (நீரவ், மால்யா போன்ற) முதலீட்டாளர்கள், தொழிலுக்கு வாங்கிய கடனை தன் சுய உபயோகத்திற்கு மாற்றியது மட்டுமல்லாது, தொழில் நொடிந்தபின், வங்கிகள் அந்த சொத்துக்களை கடனுக்கு ஈடாக வங்கிகள் முடக்க முடியாமல் செய்தார்கள். ஒரு சிலர் செய்துவிட்டு நல்லபிள்ளை போல் பிறநாட்டுக்குப்போய் அந்நாட்டு ப்ரஜையாகவும் ஆகிவிடுவார்கள். ஜனநாயகமும் தனிமனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் இந்த வகை நாடுகளில், ஏமாற்றும் தொழிலதிபர்களை தண்டிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏன் என கேட்கிறீர்களா? கணக்கர்களும், வக்கில்களும் கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பு படித்து பட்டம் பெறுவது எதற்காக என்கிறீர்கள்? சட்டங்களில் ஓட்டைகளைக்கண்டு பிடித்து வாதித்து அவர்களை விடுவிக்கத்தானே! இந்த விளக்கத்தால் நீங்கள் ஒருவேளை கோபம் அடைந்து இந்த கடன் முறையையே ஒழிக்க வேண்டும் என்றால் அது, ‘மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்தியதுக்கு’ ஒப்பாகும். ஓட்டைகளை சமன் செய்ய அரசு பல சட்டங்களை இயற்றினால் மட்டும் போதாது, கடன் தரும் வங்கி நிர்வாகமும் கண்ணில் ‘விளக்கெண்ணை’ போட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டும்.

நிரவ் மோடி, விஜய் மால்யா போன்றவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பித்தர கவலைப்படுவதாக ஒன்றும் தெரியவில்லை. கடன் கொடுத்தவர்தான் (வட்டி ஒருபுறம் இருக்கட்டும்) முதலாவது வருமா, என்று கவலையோடு பதைக்கிறார்கள் என்று பரவலாக மக்கள் பேசிக்கொள்கிறீர்கள். இப்போதாவது ஒத்துக்கொள்வீர்களா, ஏன் கடன் ‘கொடுத்தார்’ நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பராமாயணத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று? ஆனால் என்னவோ இதிகாச காலங்களிலெல்லாம் கடன் என்றால், ‘நன்றிக்கடன்’ மட்டும்தான் தெரியும் என்று சொல்லக்கேள்வி!

கடந்து வந்த நடைமேடை பேரங்கள்

பேரம் பேசுவது என்பது ஒரு சுவையான கலை. எண்பந்துகளில் ஆபீஸ வேலைக்காக பம்பாய் (இப்போதுதான் மும்பை) போகும்போது, புடவை, ட்ரஸ் மெட்டீரியல் வாங்கிச்செல்வது பழக்கம். அங்கு செம்பூர் நாக்கா, சயான் காந்தி மார்க்கெட்டுகளில் நடைமேடை கடைகளில் வாங்கிய அனுபவம் உங்களில் எத்தனை பேருக்கு உண்டு? அதுவும் அரைகுறை இந்தியில் சம்பாஷிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்! வரிசையாக நிறைய கடைகள் இருக்கும். முதலில் ஒரு ரவுண்டு எதுவும் வாங்காமல். பிடித்த துணிகள் ஐந்தாறு கடைகளிலாவது இருக்கின்றதா என்று கன்பர்ம் செய்த பிறகு, முதலில் ஒரு கடையில் பிடித்த புடவையின் விலை என்ன என ஆரம்பிக்க வேண்டும். உரையாடல் கிட்டத்தட்ட இந்தவாறுதான் இருக்கும்:

கடைக்காரன்: ஐந்நூறு ரூபாய்

நான்: ரொம்ப ஜாஸ்தி.

அவன்: இது குட் க்வாலிடி மெட்டீரியல் சார். விலை குறைச்சலில் வேற இருக்கு, வேணும்னா அதை காட்றேன்.

நமக்கு அந்த அளவு பாண்டித்தியம் இருந்தால் ஏன் அங்க வந்து துணி வாங்கறேன்னு’ மனதுக்குள் அசை போட்டுக்கொண்டு, ‘எனக்கு அந்த புடவைதான் வேணும். ஆனால் வெலதான் ஜாஸ்தியா இருக்கு’

அவன், உடனே ‘உங்களுக்காக 450க்கு வேண்ணாதறேன் அப்படின்னால் அவன் பேரத்துக்கு தயார் என்று பொருள். உடனே நாம் ஒரு விவையை சொல்லாக கூடாது. ‘ஊகும் இது சரி படாது’ன்னு அங்கிருந்து நகர முயற்சிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். கடைக்காரன் புடவையை மடித்துவைக்க ஆரம்பித்துவிட்டால் மேற்கொண்டு பேரம் இல்லை. அவன் ‘இந்த விலைக்கு கீழே யாரும் தரமாட்டார்கள’ன்னு சொல்ல ஆரம்பித்தால் அவன் பேரத்துக்கு ரெடி. நான் ‘சரி, உன்னால் எவ்வளவுக்கு கொடுக்க முடியும்’ன்னு பேரத்தை தொடங்கலாம். பிறகு உரையாடல் கிட்டத்தட்ட கீழ் கண்டவாறு போகும்:

கடைக்காரன்: பைனலாக நானூறு ரூபாய். அதுவும் உங்களுக்காக. திரும்பவும் நீங்கள் நம்கடைக்கு வரவேண்டும அப்படிங்கறதுக்காக. இந்த தருணம்தான் பேரம் பேசுபவர்களின் திறமைக்கு ஒரு சவால். கூச்சமில்லாமல் தைரியமாக ‘இருநூறுன்னா வாங்கிக்கிறேன்’ அப்படின்னு சிரித்தபடி அவன் முகத்தைப்பார்த்தபடி கேக்கணும். பல பேருக்கு இந்த தைரியம் இருப்பதில்லை.

ஒரு சமயம் என்னுடன் ஷாப்பிங் வந்த என் நண்பன், நான் பேச ஆரம்பித்தவுடன் கிடுகிடுன்னு நாலைந்து கடை தள்ளிப்போய் கண்ணுக்கு கூட தென்படாமல் போனது ஞாபகம் வருகிறது.

இப்போதுதான் உச்சகட்டம். அவன் நாலைந்து வார்த்தை கோபமாக ‘உங்களைப்பார்த்தால் வாங்குபவர் போலில்லைன்னு‘ மடித்து வைக்க ஆரம்பித்தவுடன் மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பிக்குணும்; அவன் ஏதும் பேசலைன்னா அவன் குறைக்க மாட்டான்னு அர்த்தம்; அவன் ‘ஏன் சார் போரீங்க, கட்டுப்படி ஆகறாமாதிரி ஒரு விலை சொல்லி வாங்கிட்டு போங்க’ அப்படின்னா பேரம் ‘ஈஸ் தேர்’. இருநூறுக்கு மேல் தர முடியாதுன்னு ஒறேபிடியாக நாம் நின்றால், அவன், படிப்படியாக குறைப்பான். முடிவில் இருநூற்றைம்பதுக்குள் முடிக்கலாம்.

அவன் சொன்ன விலையில் பாதிக்கு ஸக்ஸஸ்புல்லாக பேரம் பண்ணி வாங்கிய புடவையை பேக்பண்ணி கையில் எடுத்துக்கொண்டு அதுவரை தூரத்திலிருந்த என் நண்பனை ஒரு வெற்றிப்பார்வை பார்த்தேன். ‘என்னால்லாம் இந்த மாதிரி முடியாதப்பா’ அப்படின்னு சொன்னபோது ‘ஈன்றபோதில் பெரிதுவக்கும் தாயின்’ ஞாபகம் வந்தது.

வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்தவுடன் என் சகதர்மிணியிடம் பெட்டியிலிருந்து படவையை எடுத்து பெருமிதத்துடன் நான் பேரம் பேசிய வரலாற்றை சொல்லி முடிக்கவும் அவள் அதை பிரித்து ‘நீளம் கம்மியான்னா இருக்கு இதை யார் கட்டறது’ன்னு சொன்னவுடன் ‘இஞ்சி தின்ன கு….குக்கும்’ எனக்கும் வித்தியாசம் அதிகம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

முப்பது வருஷம் ஆயிட்டுது. இப்போதெல்லாம் அவ்வளவாக பேரம் பேசுவதில்லை (பேரன் பேத்திகள் கூட திட்டுகிறார்கள்). குறிப்பாக தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்களிடம் அறவே கிடையாது. அது என்ன ஐந்து, பத்து ரூபாய்க்கு அவர்களிடம் பேரம் பேசும் நாம் ஏன் நூறுக்கும் குறைவாக டிப்ஸ் எப்பவுமே வைப்பதில்லை? வரட்டு கவுரவமோ?

இட்டிலிக்கு தோல்வியா? ஒரு போதும் ஏற்க முடியாது!

இந்த பதிவுக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருப்பதாக யாராவது முடிச்சு போட நினைத்தால் அது என் தவறில்லை.

என் கல்லூரி விடுதியில் சமீப காலமாக தினமும் காலை டிபன் எனக்கு பிடித்த இட்லி தான். பல நாட்கள் அதை உண்டு சலித்துப்போன என் சகமாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். மாற்றத்துக்காகவே மாற்றம் வேண்டும் என்பதுதான் இந்த கும்பலில் குறிக்கோள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார்.

நிறைய பேருக்கு உப்புமா அறவே பிடிக்காது;ஆனால் உப்புமாவே வேண்டாம் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் இட்லிக்கு 18 பேர், தோசைக்கு 15 பேர் பூரிக்கு 17 பேர் பொங்கலுக்கு 14 பேர் என வாக்களித்தனர். உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர். அந்தோ பரிதாபம். உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக இப்போது அளிக்கப்படுகிறது.

எனக்கு ஒருபோதும் அறவே பிடிக்காத உப்புமா தேர்வில் வெற்றி பெற்றதை நினைத்து பெரு வருத்தத்தில் இருக்கும் என்னுடன், உப்புமா என்றாலே ஓடும அன்பர்கள், வாக்கெடுப்பில் ‘கோல்மால்’ என்று வார்டனை எதிர்த்து போராட அழைத்துள்ளேன். இது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த பதிவு உங்களுக்கு தவறிப்போய் புரிந்திருந்தால், தவறாமல் ஓட்டு சாவடிக்குபோய், நோட்டா, சுயேச்சை, மையம், சொய்யம் என வேஸ்ட் பண்ணாமல், உருப்படியா ஓட்டு போட்டாத்தான் உப்புமாவை தோற்கடிக்கலாம். உப்புமா பிரியர்கள், உங்களை ஏமாற்ற, அதை கர்நாடக காராபாத் மாதிரி ஸூப்பரா பண்ணலாம் என்பார்கள். வாய்மாலத்தில் ஒருபோதும் மயங்காதீர். இட்லியை சாப்பிட்ட வாயால் வேறு ஒன்றா….ஒழிக உப்புமா. மீண்டும் மீண்டும் இட்லி… இட்லிக்கு மட்டுமே உங்கள் வாக்கு….. புரிந்ததா?

Laughter is the best medicine, even in serious politics!

Quick wit responses are invariably the trait of successful leaders world across. There were quite a few occasions in a parliamentary democracy where this broke the ice sending the whole house on laughter during serious debates.

A B Vajpayee, the orator par excellence, during one of his stints in the opposition bench, when sparks were flying in a debate in parliament, uttered ‘half of the congress party men are fools!‘. The speaker promptly pulled him up and demanded him to withdraw the statement. He immediately responded ‘sorry, I modify the wrong statement, ‘ half of the congress party men are not fools!’. The whole house ruptured into a laughter.

On one occasion, when Acharya Kripalani was criticizing the Congress, a member pointed out to him that his wife Sucheta was with the Congress. Kripalani replied: “So far, I thought Congressmen were fools. Now I know they are gangsters too, running away with other people’s wives.”

The debates in English legislatures also has several parallels. During a debate in the House of Commons, Lady Astor, the first woman MP in the House, furious with Churchill, shouted at him, “if you were my husband, I’d put poison in your tea”, To which Churchill coolly replied, “Madam, if I were your husband…I’d drink it”

There are quite a few anecdotes of Winston Churchil that will make everyone admire his wisdom and sharp presence of mind.

Once, it so happened that President Roosevelt was trundling into Churchill’s room in his wheelchair to see his guest, and being startled to catch a naked Churchill just stepping out of his bath. He hurriedly set about reversing his wheelchair but was stopped by Churchill: ‘The Prime Minister has nothing to hide from the President of the United States.’

Churchill’s humour is stupendous: On his eightieth birthday, in 1954, a young man was sent to take his photograph. Full of awe, he breathed, ‘Sir Winston, it is wonderful to take your photograph on your eightieth birthday and I do look forward to taking it again on your hundredth birthday.’ Churchill giggled and replied, ‘Young man, you appear to me to be in good health and sound in wind and limb. So I see no reason why you should not.’

Though being successful as a politician, he didn’t mince words while talking about politics. He once remarked, “A politician needs the ability to foretell what is going to happen tomorrow, next week, next month, and next year. And to also have the ability to explain why it didn’t happen afterwards!”

The trait of Successful politicians is indeed the sense of humour!

Our judicial system

A cow was running away from the jungle. ..

An elephant stopped the cow and asked the reason behind the panic..

Cow said : “government had ordered to catch all the buffaloes in the jungle”

Elephant asked: “but you are a cow, why are you running ??

Cow said: ” I know I am cow , but if they catch me , it will take 20 years to prove that I am a cow not a buffalo. …!

Elephant also started running with the cow….