Indian citizenship debate – Democracy at its Zenith?

No other country would have debated so passionately on citizenship as India. Strangely, popular leaders of even other countries such as Mahathir Mohamad, president of Malaysia, politicians of USA, and others have not felt shy of commenting and advising India, without giving an iota of credence to its sovereignty. Would they dare utter a word about the Uighurs of China? Or against Trump who is fighting his senate for building a wall to prevent the ‘poor’ Mexicans from sneaking in? Is it indicative of India’s economic weakness or its power of democracy?

Unfortunately many of the Indian politicians are more desirous of their public display of secular credentials to score in the electoral arena, rather than with a vision to their country’s welfare. In such a charged atmosphere, has the Indian citizen got any clarity on the citizenship amendment act (CAA)? After all he is the one who has to accept to share the resources with this new class who are going to be included as citizens?

For many of us, CAA is limited to only providing a ‘onetime window’ to enable specific category of people to get the Indian citizenship: The Hindus, Sikhs, Jains, Buddhists, Christians, and Parsis, who survived forcible conversion from the three countries, escaped and illegally entered India, were categorised as illegal migrants. As of December 31, 2014, they numbered 31,313: Hindus (25,447), Sikhs (5807), Buddhists (2), Christians (55), and Parsis (2). Those belonging to two religions were not in this list: Muslims and Jews. A small number of Jews have already migrated to Israel. No Muslims or Jews came to India over the last 70 years on grounds of religious persecution.

Should we bother at all about persecution of our neighbours? Historically, It is our culture to have a humanitarian approach to those knocking our doors, be at our house or at the borders. Ever Since independence, We have liberal policy of handling such refugee influxes with the exiting causes being religious, ethnic or others. These refugees should be logically sent back to their parent nations once peace returns. If normalcy does not return, we are compelled to resolve the issues. While the ethnic persecution seems to have abated especially in the neighbouring Sri Lanka, religious persecution continues to persist in some Muslim nations. So the Indian lawmakers considered it appropriate to give a onetime waiver in terms of the mandatory number of years of residency to these persecuted minorities considering their hardships.

Why does it exclude Muslims? Is it ultra vires the Constitution of India, especially Articles 11 and 14? Is it divisive, and violative of human rights because it discriminates against Muslims?

Though large Muslim population would have crossed the Indian orders, the reason for migration is not religious persecution: better opportunities could be a prime mover though creating unrest might be a hidden agenda (as perceived by NIA). This has also been corroborated in the case of Myanmar Rohingyas by Bangladesh. Recently, after CAA, Bangladesh has indicated its readiness to consider genuine cases for rehabilitation. The case of Ahmadiyas also belong to this suspicious category.

Article 11 in fact empowers Parliament to bring such an amendment as the CAA. As for the CAA violating Article 14, there are precedences of Supreme Court of India judgments to take cues. on the interpretation of this Article: A simple example is of a Brahmin claiming reservation in education and schools on a par with Scheduled Castes because of Article 14 guaranteeing “equality before law”. The Supreme Court has repeatedly made it clear that equality before law is only for those equally placed: Hence Brahmin is not equal to an SC or ST. Here on religious persecution, the Muslims of Pakistan etc., are not similarly placed.

Can’t an immigrant Muslim become Indian citizen at all? Yes. Of course yes. Any immigrant Muslim can become an Indian citizen under the naturalisation section: if he/she is ordinarily resident of India for 12 years (throughout 12 months preceding the date of application and 11 years in the aggregate). Hence, though there is no provision in CAA to deny any rights of Indian Muslims, they continue to enjoy their rights under the existing sections!

What are the concerns of Indian Muslims? There is nothing absolutely in CAA. But, there is a fear that like in Assam, a National Registry of Citizenship (NRC), might be called at a later date. Knowing the Hindutva agenda of the present regime, Indian Muslims are apprehensive that they might be selectively excluded and expelled from india! This applies to other Indian nationals also.

Is there a need for NRC? Should you not keep a list of people who are in your ‘house’? While a stranger comes to the house knocking your front door, the illegal immigrants sneak without your knowledge. Without NRC, it would be impossible to stem the infiltration of these illegal job seekers in a country as large as India. The increase in militancy also can’t be lost sight off. With NRC, it would be easy to weed out the illegal immigrant for thwarting militancy as well as protecting the job opportunities of the citizens.The need for such a registry can not be denied as it is long felt such registry to plan the allocation of resources among the citizens. The perceived threats of documentary evidences that might be called for to prove the citizenship as a prelude to NRC, is imaginary as no rules have yet been framed. Such is the practise not only in the western world, but even in Pakistan and Bangladesh! Why should there be any objection?

It is interesting to now about the origin of NRC: in the aftermath of Bangladesh war, there was aclot of immigration into Assam. This led to conflicts and economic downslide of the local population leading to violent agitations against these immigrants. Indian government bought peace promising to protect the rights of locals. It was in 1971. Supreme Court mandated to create NRC for this purpose. There were practical difficulties in the appropriateness of the registry under the existing citizenship provisions. There is a similar situation in north eastern states as well. These states want to exclude all refugees from the citizenship! In a nutshell they want to exclude all refugees!

So can we put this problem in the back burner? Can a refugee continue to be so for generations? Would it be practical to confine them within a boundary of protection for decades? If they sneak out and start looking for employment in the country at large, could we able to stop it practically? Already it is happening. We are seeing illegal Bangladeshi migrants at work in even south, especially in places like Bangalore and Thiruppur in Tamilnadu. This creates unrest amongst the locals as it strips the already dwindling opportunities.

NRC would at least, enable identifying these illegal immigrants and deny them equal opportunities with the locals if not summarily confining them in camps, if they can’t be deported.

Misinformation galore! The opponents in north east and Assam want NRC; The agitators in other states do not want NRC. Immigrant Muslims want citizenship on par with others, else they feel deportation, hence no NRC; Politicians who want their votes, are desirous of enumerating them as citizens! other suspicious Indians feel they may be harassed to prove their citizenship with documents which they may not have, so no-NRC. For Logical Indian, who are thinking ahead for the future generations, they want to take bull by the horn! So NRC is needed, but without undue harassment; Considerate Indians feel, there should be a livelihood for the persecuted ‘minorities’ to live in honour as a citizen of a state; identify them to give citizenship and purge the other terror mongers! If an immigrant Muslim is living in the country for over 12 years, give them citizenship.

Are the violent agitations of the opposition parties, SECULAR and educated friends are short sighted only to confront the progress of BJP in the election front but loose the country in the long run?

கனவா நனவா?

இரவு படுக்கையில் எப்போதும் போல் phoneஇல் மேய்ந்து கொண்டிருந்தேன். எங்கள் Engineering நண்பர்கள் வாட்ஸ்ஆப் group இல், பம்பாய் நண்பன் ராமநாதன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்திருந்தான் ‘தினமும் walking போகாமல் இருந்தால, இதயநோய் உண்டோ இல்லையோ, ஒரு பெரிய தலைமுதல் கால் வரை வியாதி லிஸ்ட் கொடுத்து அதில் ஏதோ ஒன்றாவது நிச்சயம்’ என்பதுதான் அது. ஏதோ நம்ப குப்பனோ -சுப்பனோ – பாட்டியோ சொன்னால் நம்ப மாட்டோம்னு பெரிய வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கோள் காட்டி இருந்தது அந்த தகவல். நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, அந்த ஆலோசனையை பின்பற்றுபவர்கள் வீட்டிலிருந்து வட்டப்பாதையில் நடக்காமல் நீள்பாதையில் மட்டும் நடந்திருந்தால், இப்போது வடதுருவத்தை அடைந்திருப்பார்களாம்! அவர்களில் பலரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக பரவலாக சொல்லி கேள்வி.

பதவி ஓய்வு பெற்ற பிறகு அந்த அளவு நடக்கவில்லயோ? உடனே மனதுக்குள் எழுந்த பயத்தினால் ஒரு resolution, நாளை முதல் காலை பால் வாங்க போகும்போது ரெண்டு தெருவாவது சுற்ற வேண்டும். Walking for dual Purpose! ஆனால் சென்னை மாநகரம் நடைபழகிகளின் நண்பனில்லை என்பதும், நடைபாதைகள் பலரின் ஆக்ரமிப்புள்ளாகியிருக்கிறது என்பதும், குரைக்கும் நாய் கடிக்காது என்பதை நாய்கள் படித்திருக்க வாய்ப்பில்லாத்தால் நாலா பக்கங்களிலும் பார்த்து நடந்தால்தான் ரத்தசேதம் இல்லாமல் வீடு திரும்பமுடியும் என்பதையும் நன்றாக அறிந்திருந்தேன்.

காலையில் முழித்தபோது ‘ஒரே பனியா இருக்கே, கொஞ்சம் லேட்டாதான் போகலாமோ? சோம்பல் மனம் ப்ரேக் போட்டாலும், நோ…நோ… உடம்பு ஆரோக்கியம்தான் முக்கியம்’. பையைமாட்டிக்கொண்டு மில்க் பூத்தில் பால் பாக்கெட்கள் வாங்கி, அப்படியே தூரத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப்போய் பேப்பர் வாங்கி மெதுவாக நடந்து வந்ததில் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. முதல்நாள் இது போதும். ஒரு தீர்மானத்துடன் நடை கட்டி வீடு திரும்பினேன்.

தெருமுனையிலிருந்து மெதுவாக வீட்டுப்பக்கம் திரும்பினால் ‘என்ன ஆயிற்று? வீட்டில் கூட்டம். பதட்டத்தோடு நுழைந்தால், பெட்டில் நான் கண்ணை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். ஆனால் ஏன் டாக்டர் பல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்? ஏன் ‘ஆம்புலன்ஸ் call பண்ணுங்கள்’ என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் வாங்கி வருவதற்குள் இவ்வளவு களேபரமா? ஒரு doubt? நான்தான் பால் வாங்கி வந்தேன் என்றால் படுக்கையில் இருப்பது யார்? கண்ணாடியில் போய் பார்க்கலாம், அப்போது தெரியும் நான் நான்தானான்னு…oh my god… கண்ணாடியில் ஏன் என் முகம் தெரியவில்லை? ஐயோ … நான் ஆவி ஆகி விட்டேனா? Wife கிட்டக்க password எல்லாம் எங்க store பண்ணியிருக்கேன்னு சொல்லலையே? அவ்வளவு பணமும் ஸ்வாஹாவா?

கண்ணை சிறிது மூடிதிறந்தால் வேறு ஒரு இடத்தில் இருக்கிறேன். ஆமாம்.. அங்க என்ன பெரிய க்யூ? முன்னாடி நிற்பவரிடம் கேட்டேன்? சித்ரகுப்தனின் immigration clearance ஆபீஸாம். நரகத்துக்கா சொர்க்கத்துக்கா என்று அங்குதான் பிரித்து அனுப்புவார்களாம். நம்முடைய கர்மவினை databaseஐ access பண்ணமுடியலையாம். Server ப்ராப்ளம். அப்போதுதான் என் மரமண்டைக்கு நான்செத்து போய்விட்டது உறைத்தது.

மனதுக்குள் சொர்க்கத்துக்கு ஏதாவது சான்ஸ் இருக்குமா என்று ஒரு கணக்கு ஒடியது. ஊகும்…நிச்சயம் கிடையாது, ஒருநல்லது பண்ணினா மாதிரி கூட ஞாபகத்துக்கு ஒன்றும் வரவில்லை. நிச்சயம் கொதிக்கும் அந்த எண்ணை சட்டிதான். அதற்குள் க்யூ கடகட வென்று நகர ஆரம்பித்துவிட, மனசு டப்டப் என அலற, பயந்தால் போலவே ‘நரகம்’ கேட்டை அந்த ‘பாவி’ சித்ரகுப்தன் கைகாட்டினார். உள்ளே போனால், ஒரே நாத்தம் சாக்கடை ஓடவில்லையாம்; குழாயில் தண்ணிவரவில்லையாம்…ஆனாலும் நம்ப மெட்ராஸ் தேவலாம்பா. யாராவது மெட்ராஸை ‘நரகம்னு’ சொன்னா அவர்களுக்கு ஈரேழு பதினாலு பிறவிக்கும் (நிஜ)நரகம்தான் அப்படின்னு மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.

இஞ்சனியரிங் படித்திருந்ததாலும் சென்னையில் ஆண்டாண்டுகாலம் இருந்ததாலும் சாக்கடை அடைப்பை எடுத்து ஓடவைப்பதிலோ, குழாயில் அடைப்பை எடுத்து தண்ணி வரவழிப்பதிலோ, எனக்கு ஒரு சிரமமும் தெரியவில்லை. நான்வந்த ஒருசில நாட்களிலேயே அந்த நரகத்தில் தண்ணி problemஓ, சாக்கடை நாத்தமோ இல்லாமல் ‘சொர்க்கம்’ போல் ஆகிவிட்டதாக அந்த எமராஜனுக்கு ந்யூஸ் போய்விட்டது. அதே சமயத்தில் server problem solve ஆகி, என்னை தவறுதலாக நரகத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் எப்போதோ ஒரு நல்ல காரியம்பண்ணி இருப்பதால் சொர்க்கத்துக்கு அனுப்பவேண்டும் என்று சித்ரகுப்தன், எமராஜனுக்கு notice கொடுத்து விட்டதாவும் எனக்கு தகவல் தெரியவந்தது.

ஆகா… சொர்க்கம் என்றால் சோமபானம் கிடைக்குமாமே..ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை போன்ற அப்ஸரஸெல்லாம் இருப்பார்களாமே.. ஜாலி ஜாலி…நிஜமாகவே அவர்கள், நம் ஊரின் பத்மினி, சாதனா மாதிரி இருப்பார்களா. அல்லது இன்னும் அழகாக இருப்பார்களா என மனம் ஒரு பக்கம் துள்ளத்தொடங்கும் போது, எமன், ‘ஊகும்.. இவரைப்போல ஒரு நல்ல இஞ்சனியர் இந்த நரகத்தில் கிடைப்பது கஷ்டம். எனவே இங்கிருந்து இவரை அனுப்பமுடியாது’ என்று சொன்னதை கேட்ட போது நம்ப பாஸ் கூட பூலோகத்தில இப்படி சொன்னதில்லயேன்னு மனம், ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், சொர்க்கம் கைவிட்டுப்போவதை நினைத்து, கொஞ்சம் அழுதது.

அப்போது, உரத்த குரலில், எங்கிருந்தோ ஒரு அசரரி ஒலிக்கிறது: ‘மணி ஏழரை ஆறது. இன்னும் என்ன தூக்கம்? பால் வாங்கிண்டு வாங்கோ?’ திடுக்குன்னது.. கண்ணைத்திறந்து முழித்து பார்த்தால் அசந்து தூங்கி இருப்பது புரிந்தது. அப்ப நான் இன்னும் சாகலையா? நரகம் போனதெல்லாம் கனவிலா? Thank god….there is no crowd, no doctor, no ambulance either… ஆமாம்…பால் பை எங்கே?

‘அப்படியே வரும்போது sumpல தண்ணி இருக்கான்னு பாருங்க.. கொழாயில தண்ணிவல்ல’ என்று என் வீட்டுக்காரி கூவுவது உங்கள் காதிலும் விழுந்துவிட்டதா..

Walking…. ஊகும். இன்னிக்கு வேண்டாம், நாளைலேர்ந்து நிச்சயம் வாக்கிங் உண்டு.

சாரி ராமநாதா!

Slip of the tongue or Freudian slips?

A slip of the tongue is not abnormal in common walk of life. You may want to say “I’m glad you’re here,” but what came out may be: “I’m mad you’re here.” Celebrities such as Ronald Reagan, are notorious for these slips even with written ‘slips’ prompting them: As president, sometimes he veered from his carefully written speeches with disastrous results. In 1988, when trying to quote John Adams, who said, “Facts are stubborn things,” Reagan slipped and said, “Facts are stupid things.”

Without having written slips, there are even more hilarious instances: When confrontations between protesters and police turned violent, Daley’s blooper comment reflected the opinion of many people: “The police are not here to create disorder, they’re here to preserve disorder.” While closing a congressional session, Lewis’s real feelings about his peers slipped out when he said, “I want to thank each and every one of you for having extinguished yourselves this session.” Spiro Theodore Agnew served as vice president from 1969 to 1973 under President Nixon, before resigning following evidence of tax evasion. This slip expressed his true feelings on this matter: “I apologize for lying to you. I promise I won’t deceive you except in matters of this sort.”

But when these ‘slips’ reveal some unconscious aspect of the mind, it is known as ‘Freudian’ Slip. Sometimes it is extremely difficult to decipher the difference!

For instance if your girl friend asks, ‘What would you like—bread and butter, or cake?’ You may reply ‘unconsciously ‘Bed and butter.’ Such slips by ludicrous politicians are even more interesting: During a televised speech on education, Senator Ted Kennedy meant to say that “Our national interest ought to be to encourage the best and brightest.” Instead, Kennedy accidentally said “breast” – his hands even cupping the air as he said the word. While he quickly corrected his gaffe and continued, the slip of the tongue seemed revealing considering his hand gestures and the family’s reputation for womanizing. At a Washington D.C. dinner party, Condoleezza Rice, then National Security Advisor to President Bush stated, “As I was telling my husb—as I was telling President Bush.” The Freudian slip seemed to reveal perhaps some hidden feelings the unmarried Rice might hold toward her boss. When actress Amanda Seyfried appeared on the Today show to promote the film Ted 2, announcer Willie Geist accidentally described her as “titsy” rather than “ditzy.” Besides simply being an amusing slip, the comment perhaps revealed what was really on his mind. While campaigning in 1988, Bush described serving as Ronald Reagan’s vice president this way: “For seven and a half years I’ve worked alongside President Reagan. We’ve had triumphs. Made some mistakes. We’ve had some sex . . . uh . . . setbacks.” When it comes to presidents 41 and 43, you could say that the slip doesn’t fall far from the tongue.

Some slips of the tongues in the local languages are very exhilarating but can’t be translated without losing their hidden flavour. Look at the utterances of a leader of the most popular Indian political party, DMK, Stalin, in Tamil. They are worth their value in gold. Here are some of his public utterances:

‘‘யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே..’’ என பழமொழியை பக்குவமாக சொதப்பினார்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று கூறுவதற்கு பதிலாக….

ஆட்டுக்கு தாடியும், மாட்டுக்கு கவர்னரும் என்று தத்துவார்த்தமாக முழங்கினார்.

மதில் மேல் பூனையாக என்ற பழமொழியை பூனை மேல் மதில் போல என்றும்,

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக லாரியில் தண்ணீரை ஏற்றி என்று கூறுவதற்கு பதிலாக ‘‘தண்ணீர் மீது லாரியை ஏற்றி…’’ என்றும் உளறினார்.

இதற்கெல்லாம் மேலாக…. கஜா புயலை, கஜா முயல் என்று முழங்கியதை இப்போது நினைத்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது.

சனாதனத்தை வேரறுப்போம் என்ன முழக்கத்துடன் திமுக கூட்டணி கட்சி ஒன்று மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், சனாதனம் என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியாமல், ‘‘சதசதானத்தை வேரறுப்போம்’’ என்று முழங்கிய போது, மேடையில் இருந்த தலைவர்கள் எல்லாம் சனாதனத்தை ஸ்டாலின் இவ்வளவு ஈசியாக கொலை செய்து அழித்து விட்டாரே என்று அதிர்ந்து விட்டனர்.

பெயர்களை உச்சரிப்பதில் கூட….

அருண் ஜேட்லி – அருண் ஜட்டி,

சித்திரவதைகள் – சித்திரைகள்

சாகித்ய அகாடமி விருது – சாதித்திய விருது என்றெல்லாம் பேசி மக்களை உற்சாகப்படுத்தினார்.

அதுமட்டுமல்ல… முதலில் கலவரத்தை அடக்க வேண்டும் என்பதற்கு பதிலாக “முதலில் கலவரத்தை நடத்தணும்’’ என்று கூறி கேட்பவர்களுக்கு பீதியூட்டினார்.

‘‘ தமிழகத்தில் சங்கிலி பறிப்பு, தாலி அறுப்பு’’ நடக்கிறது என்பதை ‘‘சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு’’ என்று கூறி பார்வையாளர்கள் அனைவரையும் தலை சுற்ற வைத்தார்.

For some other leaders, slip of the tongue exposes their ‘natural‘ stupidity as well. Classic example is that of Rahul Gandhi. Among the many quotes attributed to him, here are few samples:

Talking to people in Firozabad, Rahul said: “You all are demanding a potato factory in your area, but you should understand I am an opposition leader. I cannot open a potato factory“. A slip of tongue, abound in almost all of his speeches, landed him in trouble here as what he meant to say was factory of potato chips and not ‘potato factory‘.

Addressing the students at Narsee Monjee Institute of Management Studies in Mumbai, Rahul said, “One day you’re going to run this country, run the institutions, you will be the Steve Jobs in the Microsofts and the leaders…the Facebooks of this country.” We don’t know if it was a slip of tongue or Rahul really didn’t know that Steve Jobs is not from Microsoft.

There is no dearth for humour as long as politicians are around…??

இட்லி மகாத்மியம்

தஞ்சாவூர்க்காரர்களுக்கு நாக்கு கொஞ்சம் நீளம்ன்னு நிறைய பேர் கிண்டல் செய்வதாக கேள்வி; ருசித்து சாப்பிடுவதில் அப்படி என்ன தப்பு என்று எனக்கு தெரியவில்லை. நான் பிறந்தது மாயவரத்துக்கு பக்கத்தில்உள்ள ஒரு கிராமத்தில்; வளர்ந்தது, படித்தது, பட்டதாரியானது எல்லாம் சிதம்பரத்தில்தான். இந்த ஊர்கள் தஞ்சாவூருக்கு வெகு தொலைவிலில்லை என்பதாலோ என்னவோ சின்ன வயசிலிருந்தே சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு பழக்கப்பட்டவன். அதோடு பரம்பரை பரம்பரையாக ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பத்தை சேர்ந்தவன் வேறு. என் இளம் பிரியத்தில் எங்கள் ஹோட்டல் சிதம்பரத்தில் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. தப்பித்தவறி என் அப்பா என்னை அண்ணாமலை பல்கலை கழகத்தில் கெமிகல் எஞ்சினியரிங்கில் சேர்த்துவிட்டார். இல்லாவிட்டால் நான் குடும்பத்தொழிலைத்தான் தொடர்ந்திருப்பேனோ என்னவோ?

ஏதோ ஒரு வழியாக படித்து முடித்தவுடன் கல்பாக்கத்தில் வேலைக்கு சேர்ந்ததிருந்த சமயம் அது; கல்யாணமும் அப்போதுதான் ஆகியிருந்தது. அந்த காலத்திலிருந்தே நான் ஒரு இட்லி பிரியனாதலால் கிடைத்த சுமாரான சம்பாத்தியத்தில் (தவணை முறையில்) சுமீத் மிக்ஸி, மாவு அரைக்க வாங்கினேன். வாங்கியவுடன் அதில் மாவு அரைத்து, அதில் செய்த இட்லியை சுடச்சுட நீட்டினாள் மனைவி. வாயில் போட்டவுன், ‘என்ன இது, நம்ப சிதம்பரத்தில் சாப்பிடுவது போல் இல்லையே?’ ; உடன் சகதர்மிணி, ‘மிக்ஸியில் அரைத்தால் அப்படித்தான் வரும், கிரைண்டரில் அரைத்தாற்போல் இருக்காது’ என்றாள். உடனேயே ஒரு கிரைண்டர் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தோம். டேபிள் டாப் கிரைண்டர் கலாச்சாரம் அப்போதுதான் (எண்பதுகள்) நம் சமயலறைகளை ஊடுருவ ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. கோயம்பத்தூர் நண்பன் ஒருவன் மூலம் சுகுணா வெட்கிரண்டர் ஆர்டர் பண்ணினேன். வீட்டுக்கு கிரைன்டர் வந்தவுடன், சூப்பர் இட்லி சாப்பிடும் பிரகாசமான எதிர்காலம் என் கண்களில் ஒளிவிட்டது உங்களில் யாருக்கும் தெரிந்திருக்காது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அந்த இட்லியும் வந்தது: மனைவியிடம்,, ‘அப்படி எனக்கு ஒண்ணும் பெரிய வித்யாசம் தெரியலயே?’ என்றவுடன் அவளோ, ‘என்னவோ தெறியலை. சிதம்பரத்தைப் போல விழுது காணல; மாவும் அவ்வளவா பொங்கல, ஒரு வேளை இந்த பக்கத்து உளுந்து அப்படித் தானோ’ என்றாள். அம்மாவிடம் விளக்கம் கேட்டேன். அம்மாவும் ‘உளுந்தும் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனாலும் மாவு பொங்காததற்கு கையும் ஒரு முக்கிய காரணம்’ என்றாள். விஞ்ஞானபூர்வமாக(?) எனக்கு இது விளங்கவில்லை: அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக அரைத்து பிறகு ‘கை’யால்தான் ஒன்றாக கலந்து களயவேண்டுமாம்; கரண்டி கூடாது. ‘பொங்குவது கைக்கு கை வித்யாசப்படும்; சூட்டுக்கையானால் புளிக்காது’ என்றாள் என் அம்மா. அப்படியே நான் அதை என் அகமுடையாளிடம் சொன்னால் ப்ரளயம் தான்.

ஒரு வேளை புளிக்க வைக்கும் அந்த நுண்ணுயிர்கள் கைக்கு கை வேறுபடுமோ? அப்படி என்றால் சுத்தமான (டெட்டால் போட்டு வாஷ் பண்ணின) கையால் கலந்தால் புளிக்காதோ? கொஞ்சம் லாஜிக் இடிக்கிறதே! ரொம்பவும் குடைந்தால் ‘அகராதி’ படிச்சவன்னு அம்மா திட்டுவா. ‘கிடைத்ததை வைத்து சுகப்படு; முடியாததை நினைத்து கலங்காதே’ எனும் வேதாந்த வாக்குகள் நினைவுக்கு வந்தது. ஒரு வழியா கல்பாக்கம் இட்லி ஏன் சிதம்பர ‘குஷ்பூ’ இட்லி மாதிரி இல்லன்னு புரிந்தது போல் தோன்றியதால் மனதை தேற்றிக்கொண்டேன். லைஃப்பே ஒரு காம்ப்ரமைஸ் தானே?

ஆனாலும் என் போன்ற இட்லி பிரியர் (வெறியர்)களுக்கு வெளிஊர் சென்றாலும்கூட, இட்லி வேண்டியிருக்கிறத்து. சில ஹோட்டல்களில் இட்லியை பூப்போல ஆக்க சமயல் சோடா போடுவதாக கேள்வி! அதனால்தான் ஹோட்டல் இட்லி இரண்டு, மூன்றுக்கு மேல் சாப்பிட முடிவதில்லையோ? சாப்பிட்டாலும் வயிற்று கோளாறு வருகிறதோ?

ஹோட்டல்களில் நன்றாக இருக்காது என்பது தெறிந்திருந்தாலும், அது இல்லாமல் ஏனோ காலை சிற்றுண்டி நிறைப்பதில்லை. இப்படித்தான் ஒரு முறை குஜராத்திலுள்ள ஜாம்நகரில் (அதான், நம்ப அம்பானியின், உலகின் பெரிய, பெட்ரோலிய ரிஃபைனரி உள்ள ஊர்) தங்கியிருந்த போது, ஒரு ஹோட்டலில் மெனுவில் இட்லியைப்பார்த்த நாக்கில் ஜலம் ஊறவே, உடன் ஆர்டர் செய்து விட்டேன்; வாயில் வைத்த அந்த இட்லி துண்டம் வயிற்றில் இறங்க மறுத்தது. அப்படிப்பட்ட மட்டமான வஸ்துவை என்வாழ்க்கையில் அதுவரை உண்டதில்லை! என் வீட்டுக்காரி, இதற்காகத்தான் வெய்ட் பண்ணியிருந்தாற்போல், ‘வடக்க வந்தா சப்பாத்தி, பூரின்னு ஏதாவது சாப்பிடாமல், இட்லியா ஆர்டர் பண்ணுவாங்க; அது என்ன இட்லி மேல அப்படி ஒரு மோகம்?’ என்று அதை சக்களத்தி போல கரிந்து கொட்டினாள். நான்கைந்து முறை லூஸ் மோஷன் போனபின்தான் வயிறு ஒரு வழியாக சரியானது என்பதும் இதற்கு தொடர்பான ஒரு தகவல். இது நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்;

சமீபத்தில் கம்போடியா போனபோது, இந்திய உணவு நன்றாக கிடைத்த ஒரு ஹோட்டலில், ‘இட்லி கிடைக்குமா?’ என்று, மெதுவாக என் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, கேட்டேன். அந்த ஓனருக்கு மன்னார்குடி பூர்வீகம். அவர், ‘நல்ல புழுங்கலரிசி, உளுந்து எல்லாம் சிங்கப்பூரிலிருந்து வரவழித்து விடலாம். ஆனாலும் இட்லி மாவை ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்த உடன் வேகவைக்ககூடாது (தஞ்சாவூர்காரர் அல்லவா), நன்றாக இருக்காது. சிறிது நேரம் அதன் கூல்னெஸ் போனபின்தான் இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்க வேண்டும்; ஆனால் கஸ்டமர்களை அது வரை வெய்ட் பண்ணவைக்க முடியாது இல்லையா. அதனால் இட்லியையே நாங்கள் மெனுவில் சேர்க்கவில்லை’ என்றார்.

அது என்னவோ பெங்களூர் பக்கம், உளுந்தை அரைத்து அதனுடன் தண்ணரில் ஊறவைத்த உடைத்த அரிசியை கலந்து, பின் அந்த கலவை புளித்தபின், அந்த மாவில் இட்லி ஊற்றுவார்களாமே. அதுவும், அதனோடு ஒரு அசட்டு திதிப்புடன் அவர்களின் அந்த ஸ்பெஷல் சாம்பார் வேறு; நோ நோ இதெல்லாம் நமக்கு சரி படாதப்பா.

இட்லிக்கு அப்படி என்னவோ, இன்றைய அரசியல்வாதிகளைப்போல் வெவ்வேறு வகையான ஸைட்டிஷ்களுடன் வெற்றிக் கூட்டணி அமைக்கும் ஆச்சரியமான திறமை உண்டு: கும்பகோணம் கதம்ப கொஸ்துவோ, சிதம்பரம் நடராஜர் கோயில் ஷ்பெஷல் கத்திரிக்காய் கொஸ்துவோ, கடப்பாவோ எதுவாகட்டும். ரசிகர்களுக்கு தகுந்தாற்போல சுவைக்கும்.

ஆனாலும் என்னதான் சொல்லுங்கள்; பொடிவெங்காய (ரத்னாகபே டைப்) சாம்பார், தேங்காய் சட்னி, புதினா, மல்லி சட்னி, மிளகாய் பொடி, இவற்றுடன் என்றென்றைக்கும் இணைபிரியாத (கசக்காத) நல்லெண்ணெய் இத்யாதி ‘ரத கஜ துரக பதாதி’களுடன், ஆவி பறக்கும் அந்த மதுரை மல்லிப்பூ இட்லியை சுவைக்கும் சுகம், ‘இந்திர லோகம் ஆளும் அச்சுவையும் வேண்டாம்’ எனும் அளவுக்கு இருக்கும் என்று சொன்னால் இந்த ஜகத்தில் யாராவது இல்லை என்பார்களோ?

ஒரு சென்னைவாசியின் திருக்குறள் உரை

மெட்ராஸ்காரனை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? என்று ஒரு கற்பனை:

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா, பேமானி!

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி குட்து பேசுடா, இல்லைன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடிவுடுவாண்டா சவாரி, அட, எங் கேப்மாரி.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்டகெட்ட வார்ததையா பேசிக்கினு கீற? காது கொயிய்ன்னுதுடா, கொய்யால!

புறம்கூறி பொய்த்த்யிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும்.

பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து பொயகறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி,..த்தா சொன்னா மாரி செஞ்சி பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற ம்ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க.

ஒரு பானை சோற்றுக்கு அஞ்சு சோறு பதம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

நினைத்தாலே இனிக்கும்

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா:

1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.

கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.

முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.

சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன். அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை. ‘பெண்டிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு, என்ன ட்யூன் ?”

“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! ”

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தானனன்னேயா ?

சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ?

சீதா — நேர் நேர்; ஜானகி — நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் ….

(இது புரிவதற்கு தமிழ் சற்றுத் தெரிய வேண்டும். தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை)

இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”

மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .

அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.

அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.

கண்ணதாசன், விசுவனாதன், சுஜாதா, பாலசந்தர்…. ஆகா எப்படிப்பட்ட ஜாம்பவான்களின் காம்பினேஷன்அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்திருக்கிறோம்நினைத்தாலே இனிக்கிறது!

இரு கேள்வி – ஒரே பதில்!

தமிழுக்கு அமுதென்று பெயருண்டு; பருகி மகிழலாம் வாருங்கள். முன்பே அறிந்திருந்தாலும் மீண்டும் மகிழ்வதில் தவறில்லையே!

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

உதாரணமாக,

“தேர் ஓடுவது எதனால்?

தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,

“அச்சாணியால்” என்பது.

தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது

அச் – சாணியால்

என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.

நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?

செங்கல்பட்டு

சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?

பெருங் காயத்தால்!

பரமன் விஷம் குடித்தது எதனாலே – குழந்தை அழுவதும் அதனாலே

அமுது

நாய் ஓடுவது ஏன் ? நாக்கு இனிப்பது ஏன்?

கல்கண்டு

தொடுக்கவும் செய்யலாம் – படிக்கவும் செய்யலாம் எது?

நூல்

கிழிந்ததற்கும் போடலாம் – மணக்கவும் செய்யலாம், எப்படி?

தையலை..

அழுகை வருவதெனாலே? இங்கே தங்குவதாலே!

அறை

காபி போடுவது என்ன கம்ப சூத்திரமோ?

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாகஇருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பிஎதிர்பார்த்துக் காத்திருந்தேன். ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது…மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்குமேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்பஎல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத்தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம்என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும். மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள்கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடி பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டி வைப்பதில்லை. ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.

காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்குவிஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும்.சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டி வகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும். அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?)ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம்பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும் போலாகிவிட்டது. நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள்தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப் போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடிபாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும்.

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…

ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக்கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச்சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மாஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப் போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில்சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலிஉறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம். ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக் குடித்துவிட்டு அவளுக்கும் தர வேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டுசேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது. மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கிஅமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது. ”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க்கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதைமறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்த பாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக் கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்திசக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக்கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக் கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடிதுணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து ‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டு கால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப்பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.

செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்குதிரும்புவதற்குள், ‘தூ தூ… என்று மனைவியின் கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

”எதை?”

”என் தலையை!” மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரைஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது.மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் – வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.

அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை… ”இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்குஇரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன் அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன்பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போட முறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேலஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்….ஹஹஹாஹ்

வலைதளத்தில் சிக்கிய ஒரு சககுடும்பஸ்தனின் குமுறலை பகிர்தலின் மகிழ்விற்கு ஓர் எல்லையுமுண்டோ?

Were the ancient scholars of Sanskrit, wizards of chess as well?

A knight’s tour is a sequence of moves of a knight on a chessboard such that the knight visits every square only once. If the knight ends on a square that is one knight’s move from the beginning square (so that it could tour the board again immediately, following the same path), the tour is closed; otherwise, it is open. This is one of the complex problems for the computer programmers!

One of the early mathematicians to investigate the knight’s tour problem was Leonhard Euler. The procedure for completing the knight’s tour was Warnsdorf’s rule, first described in 1823 by H. C. von Warnsdorf.

But the Indian scholars must have been aware of this problem as well the solution much earlier: The earliest known reference to the knight’s tour problem dates back to the 9th century AD. In Rudraka’s Kavyalankara, a Sanskrit work on Poetics, the pattern of a knight’s tour on a half-board has been presented as an elaborate poetic figure (citra-alaṅkāra) called the turagapadabandha or ‘arrangement in the steps of a horse’. The same verse in four lines of eight syllables each can be read from left to right or by following the path of the knight on tour. Each syllable can be thought of as representing a square on a chessboard. Rudrata’s example is as follows:

For example, the first line can be read from left to right or by moving from the first square to the second line, third syllable (2.3) and then to 1.5 to 2.7 to 4.8 to 3.6 to 4.4 to 3.2. This sequence can be completed in the bottom half of the chess board, marking the completion of a successful open tour of the knight of a 8*8 chess board.

Another great poet presented the solution in an altogether different format: Sri Vedanta Desika, in his epic work “Padhuka sahasram’ gives the solution in two of his thousand verses.

When the syllables of the first verse are written in order on the squares of the chessboard, the second verse is formed by the syllables that follow the movement of the knight, to complete half the ‘knights tour’! Given below are the two verses:

O sacred sandals of the Brahman, you are always adorned by those who have committed unpardonable sins; you remove all that is sorrowful and unwanted; you create a musical sound; (be pleased) and lead me to the feet of Lord Rangaraja.

The sandals which protect those who shine by their right attitude, whose place is the center of the blissful rays, which destroy the melancholy of the distressed, whose radiance brings peace to those who take refuge in them, which move everywhere,  -may those golden and radiating sandals of the Brahman lead me to the feet of Lord Rangaraja.

These two slOkmas are to be read together as one set. This chithra bhandham is known as ” Chathuranga-Turanga 
padha bhandham
“. Chathurangam means a chariot (chess) and  Turangam means a horse.

The above figure depicts pictorially the two slokas and the knights travel algorithamatically!

Euler, who found an answer to this problem in the 17th century, and received accolades from his contemporary western mathematicians, neither would have been aware of Sri Vedanta Desika nor read his elegant solution depicted in this stunning poetry form, hundreds of years before (14th century).

India has produced several incredibly genius like Desikacharya with exceptionally brilliant accomplishments in diverse fields but sadly remain unsung heroes!

Bungling Smart Cities

My serving senior bureaucrat friend, when asked about the difference between the style of administration between Modi and others, responded immediately, ‘in implementation’; from the selection of team to effective review system. He is watching him from his ‘Gujarat days’. But even such skills seem to have failed Modi, in realising his vision of ‘uplifting’ the tier-2 cities with the ambitious ‘smart city’ concept.

Modi’s Smart City dream has been reduced to a fantasy by bureaucrats and local leaders who haven’t addressed the issues plaguing the cities. Floods are not new to Bihar. Patna could not be stopped from ‘floating’ even under Nitish Kumar’s progressive vision. Maharashtra is an efficiently governed state, but Pune reeled under Nature’s vengeance. Both are Smart Cities. Why these two cities, for example, have not met the basic civic needs, even though resources were available and issues have been flagged since very long?

A glimpse of how this ‘vision’ is shaping up gives a dismal picture: Budget is earmarked with 48,000 crore (2015-19) for the project. Out of the 17,000 crore so far released for different projects, only `6,100 crore has been used (mere 35%). In 28 cities not a single project has been finished. In 14 cities only one project has been completed. It is shocking to discover that none of the cities chosen for the Smart trophy have complete maps of roads, drainage, water lines and other civic utilities. Some do not possess complete ownership records of public land for development and new enterprises.

A major reason for the mission’s failure is unstable administration in municipalities and other agencies. For example, the average tenure of a District Magistrate or a municipal head is less than two years. Engineers who refuse to buckle to local political pressure to ignore violations of municipal laws are frequently transferred. There is hardly a municipal body in the country which is not corrupt. Furious fights in elections is to swindle the public money and it starts at municipality levels. Nobody, irrespective of any flag, fights elections without any ‘returns’.

How to lure the local politicians to improve their cities? Even Modi is running out of ideas, I believe! If India has to become a better and cleaner country, evolving a radically different bottom-up model is imperative. Smart ideas require smarter instruments of change and not just ladder climbers with the smarts.

Credits:

www.newindianexpress.com/prabhu-chawla/2019/oct/09/opprobrious-opportunists-betray-modis-smart-vision-2044982.html