பிரயாகையில் 56 கோடி யாத்ரீகர்கள் குளித்ததாக அறிக்கை கூறுகிறது. மிகவும் மலைப்பாக உள்ளது. அது இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர்! இந்த போக்கில், சிவராத்திரிக்குள் அது நாட்டின் மக்கள்தொகையையே கூட தொட்டுவிடலாம்!
பயணிகளின் கணக்கு, செயற்கை நுண்ணறிவு மூலம் விடியோபதிவுகளை கொண்டு கணக்கிடமுடியும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த கணக்கின் நம்பகத்தன்மை என்ன? ஒருவேளை எங்காவது தவறி இருக்கலாமோ?
இதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? விமானப் பயணத் தரவுகளிலிருந்து இதை மதிப்பிடுவது ஒன்றும் கடினம் அல்ல!
தினமும் நீராட பலர் அங்கு முகாமிட்டிருக்கலாம் – சாதுக்களைப் போல – அந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
இந்த கேள்விகளை கேட்டாலே இவன் இந்துக்களுக்கு எதிரி என்று முத்திரை குத்திவிடாதீர்கள்!
உங்களுக்கு நினைவிருக்கலாம் – கோவிட் காலங்களில், நாட்டில் இறப்பு விகிதம் வியக்கத்தக்க வகையில் குறைவாக இருந்தது என்று பலருக்கு அவநம்பிக்கை இருந்தது. வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர் – உண்மை ஒருபோதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இதுவரை வெளிவரவில்லை. பாராளுமன்றத்திலும் யாரும் வினவவில்லை. அரசாங்க பதிவேடுகளலிருந்து இதை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் அல்ல! ஏனோ இதைப்பற்றி இப்போது யாருக்கும் கவலையில்லை. ஒருவேளை நமக்கு எந்த புள்ளிவிவரங்களின் மீதும் நம்பிக்கை இல்லையோ?
உலக அளவில் கூட இந்த தொற்றைப்பற்றி யாரும் இப்போது கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்த தொற்றுக்கு சீனாதானா மூலம் என்ற குற்றச்சாட்டுக்கும் விடை இல்லைதான் – ட்ரம்ப் கூட இதைப்பற்றி கவலைப்படவில்லை! ஏன்?
வரலாறு நமக்கு பல பாடங்கள கற்பிக்கிறது. அவற்றை மறக்கலாகாது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி இருந்தும் சில வினாக்களுக்கு விடையை நாம் தேடுவதில்லை! பதைந்து கிடக்கும் உண்மைகளை அறிய மனமில்லை – ஏன்?
இந்த பொறுப்பற்ற சமுதாயத்தை வருங்காலம் மன்னிக்காது!


