‘மதச்சார்பின்மை’ என்ற போர்வையில், ‘இந்து மதம்’ ஒடுக்கப்படுகின்றதா? குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த பாரம்பரியமும் பண்பாடும் பிற்போக்குத்தனம் என்று கேலிக்செய்யப்படுகின்றன. அதே சமயம் மற்ற மதங்களின் கோட்பாடுகள் எந்த தடையுமின்றி காப்பாற்றப்படுகின்றன. இந்த மனநிலை, காலனி காலத்தில் நிலவிய பிராமணர்களின் சமூக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மற்ற சாதிகளின் எழுச்சி என்று கருதப்பட்டது. நியாயப்படுத்தப்பட்டது. மத சடங்குகளில் இருந்து விலகி, சமூக வாழ்விலும் கோயில் வழிபாடுகளிலும், பிராமணர்களை ஓரங்கட்டினால், அவர்களுக்கு சமூக மரியாதையை திரும்பபெற வழி பிறக்கும் என்று இந்துக்களில் இருந்த மற்ற ஜாதியுனர் நம்பினர். அதற்காக சுமரியாதை என்ற இயக்கத்தை தொடங்கினர்.
ஆனால் கடந்த அறுபது ஏழுபது ஆண்டுகளில் இந்த இயக்கம் திசைமாறிவிட்டது. பிராமண எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து, இந்து மதத்துக்கே ஒரு கேள்விக்குறியாக இது மாறிவிட்டது. பிராமண எதிர்ப்பு என்பது மறைமுகமாக இந்து சமய எதிர்ப்பாக தெரிந்தோ தெரியாமலோ உருவெடுத்துவிட்டது.
இந்த மாநில இந்துக்கள் மற்ற மதங்களின் சூழ்ச்சியில் தங்களை அறியாமலேயே மற்ற மதங்களுக்கு மதிமயங்கிவிட்டனர். அவர்களின் பொருளாதார மற்றும் சமுதாய தாழ்வுநிலையை பயன்படுத்தி மற்றமதத்தவர்கள் தம் மதங்களை பரப்பும் முயற்சி பலனளிக்க ஆரம்பிந்துள்ளது. பட்டி தொட்டிகளெங்கும் புதிதாக முளைத்திருக்கும் மற்றும் முளைத்துவரும் எண்ணற்ற தேவாலயங்களும் மசூதிகளும் இதற்கு சாட்சி. சிதிலமடைந்த கோயில்களைக்கூட சீரமைக்க முயற்சிகள் குறைவு என்பது கண்கூடு. பொருளாதார நிலையை பயன்படுத்தி மதம் மாற்றும் குழு ஒரு புறம். இந்து மதத்தின் கோட்பாடுகளை கேலி செய்யும் சுயமரியாதை கும்பல் மறுபக்கம் என இந்துமதத்துக்கு இருபக்கத்திலும் அடி.
சிறுபான்மையினர் இந்துக்களிடம் உள்ள ஜாதி வேறுபாடுகளை பயன்படுத்தி தமக்கு ஆதரவு நிலைபாட்டு அரசியல் சூழலை உருவாக்கிக்கொள்கின்றன. அவர்களால் ஒரு குழுமத்தை உருவாக்கி அதன்மூலம் அரசியலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. அதனாலேயே அவர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.
இதனால் இந்து மதத்துக்கு இப்போதைக்கு மறுமலர்ச்சியின் வேளை வந்துவிட்டது. தற்போதைய சூழலில் இந்து மதத்தை மீட்டெடுக்க அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. ஆனால் இந்துமதத்தை பழிப்பதும், அழிப்பதும் தான் அது மதச்சார்பின்மை என்ற மனப்பான்மையில் இருப்போரை ஓரம்காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அரசர்களின் ஆதரவில்தான் மத மறுமலர்ச்சி நிகழ்த்த முடியும் என்பது வரலாறு. இப்போதும் ஜனநாயகத்தில், அரசியல் அதிகார மாற்றங்களால்தான் இதை நடத்த முடியும். தமிழகத்தில் இது நடக்காத வரையில் இந்து மதம் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பது உறுதி!
Can a drug company commit itself to sell free its patented drug to the society as long as it is needed? Yes. E-Merck did it and succeeded in eradicating a dreaded disease that blinded millions in the third world!
River blindness is one of the leading causes of preventable blindness worldwide. Transmitted through the bite of black flies — which live and breed near fast-flowing streams and rivers — and can cause intense itching, permanent skin and eye lesions and, over time, blindness. It has historically been prevalent in remote rural areas of 36 countries (in Africa, Latin America, and in Yemen.) for centuries… This is called river blindness. For centuries, River blindness has no solution and it was on WHO’s list of neglected tropical diseases targeted for elimination globally.
This all began to change in the mid-to-late 1970s when Dr. William Campbell of Merck Research Laboratories suggested the use of ivermectin (later named Mectizan) for river blindness in humans. Following the breakthrough lab work by Dr. Campbell, another Merck researcher, Dr. Mohammed Aziz, championed the clinical development of Mectizan. Dr. Aziz led the collaboration with the World Health Organization (WHO) in the early 1980s to design and implement field studies in West Africa that, ultimately, proved the effectiveness of the drug against river blindness.
In 1987, Merck committed to eliminate this blindness from the third world countries decided to donate Mectizan – note not sell – “as much as needed, for as long as needed” – with the goal to help eliminate river blindness. It is at least a twelve year regimen to an adult!
More than thirty years later, the results of this pioneering program speak for themselves. Several countries in Africa are making significant progress towards eliminating both diseases. In Latin America, four countries – Colombia, Ecuador, Mexico and Guatemala – have received WHO verification of river blindness elimination.
There are good samiritans in pharmaceutical industry and not all are just profiteering as the sole motive on the suffering of humanity!! All businesses make profits to sustain but a few earn goodwill by handholding the suffering poor!
Is the motif in E-Merck’s office, the ‘cult of sight’ or ‘lead by example’? What does the motif of this blind man led by a youth, convey? Science leads the world by ‘example’!
காலம் மாறிவிட்டது. நம் திருமண வைபலங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள் – 30 வருஷத்திலேயே எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள்.
பாக்கு வெற்றிலை மாற்றி ஊர்மக்கள், சொந்த பந்தங்களின் முன் நிச்சயம் செய்வது – வார்த்தை மாறக்கூடாது மாறக்கூடாது என்பதற்கு – ஏனெனில் திருமணம் நடக்கும் வரை ஆகும் செலவுகள் விரயமாக கூடாது என்பதால். மேலும் மணப்பெண் மாப்பிள்ளையை ஊருக்கு அறிமுகம் செய்விப்பதும் இதில் ஒரு அங்கம். இவர்களைப் பற்றி ஏதாவது விவகாரங்கள் தெரிந்தால் மக்கள் அப்போதே வெளிப்படுத்திவிடுவார்கள்.
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அந்த நாட்களில் பரிச்சயம் இல்லாமல் இருப்பார்கள். அந்த கூச்சத்தை போக்கத்தான் நலங்கு போன்ற சடங்குகள். வியட்நாம் வீடு பத்மனாபனைப்போல் அம்மாஞ்சித்தனமாக ஆடவனும் தொழுவத்தில் இருக்கும் மிரண்ட பசுவைப்போல் நம் பட்டு மாமியும் தாம்பத்தியத்தில் அடி எடுத்து வைத்த காலம் அது.
அந்த நாட்களில் நாலு நாள் திருமண சடங்குகள் நடக்கும். ஆறு பெண் பிறந்தால் அரசனும் போண்டிதான் என்ற கதை. ஆனால் நடுவில் இது வெகுவாக குறைந்து சடங்குகள் சுறுக்கப்பட்டு இரண்டு நாட்களில் திருமணம் முடிந்துவிடும். அதனால் செலவும் குறைவுதான். பெண்ணின் தகப்பனும் நிம்மதியாக வாழ்க்கையை தொடரலாம். இது வரவேற்கத்தக்கதுதான்.
ஆடிமாதம் தம்பதியை பிரித்து வைத்திருப்பார்கள் – ஏனெனில் அப்போது கருத்தரித்தால் சித்திரை மாதம் வெயிலில் பிரசவம் – AC இல்லாத நாட்களில் தாயும் சேயும் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதால் தாய் வீட்டில்தான் டெலிவரி என்பதெல்லாம் கிடையாது. பெண்ணே செலவை பார்த்துக்கொள்வாள். தாயின் ‘கர் சேவா’ மட்டும்தான் எதிர்பார்ப்பு.
ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செயதுகொள்வதால் கூச்சத்தை போக்கும் சடங்குகள் வீண்தான். ஆயினும் இப்போது நடக்கும் நிச்சயதார்த்தங்கள் பெரு விழாக்கள். நண்பர்களுடன் கொண்டாட சங்கீத் போன்ற நிகழ்ச்சிகள். இதனால் சமீப காலங்களில் செலவு திரும்பவும் அதிகரித்துவிட்டது என்பது தான் யதார்த்தம்.
இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே PRE WEDDING PHOTO SHOOTல் இவள் “சைய்ங்” என்று அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு விடுகிறாள்!
Pre Wedding Shoot லேயே இடுப்பை சுற்றி காலைக் கோர்த்துண்டுடறதுகள்! சகிக்கவில்லை… சொன்னால் இந்த காலத்தவர்கள் நம்மை ஏளனம் செய்வார்கள். பத்தாம் பசலி என்பார்கள்.
திருமணத்துக்கு முன்னரேயே living together உண்டானாதாலும் AC எங்கும் வழக்கமாக உள்ளதாலும் ஆடிமாத பிரிவெல்லாம் waste. பெண் சம்பாதிப்பதால் தன் தாய்தந்தைகளை நம்பி அவள் இல்லை. ஆனால் குழந்தை பிறந்தபின் அவர்கள் baby sittingக்காக வீட்டில் இருந்தால் நலம். அதுவும் மாமியார் வேண்டாம் மனம்ஒத்துப்போகும் தாய்தான் better. மனம் விட்டு பேசலாம் உரிமையோடு வேலையும் வாங்கலாம் அல்லவா?
இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் கஷ்டம். ஏனெனில் பெண்களுக்கு தன் உரிமைகளையும் சொந்தங்களையும் விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. பொருளாதார சுதந்திரம். சுயமரியாதை. திருமண செலவுகள் கூட sharing தானாம். ரொம்ப பேசினால் உடன் divorce தான்! காதலாவது கத்தரிக்காயாவது.
ஒரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதால் பந்தங்களே குறைவு. காற்று மாசு அப்படி இப்படி என்று பண்டிகைகளும் சுறுங்கிவிட்டன. அதனால் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை you tubeஇல் தான் தெரிந்து கொள்ளவேண்டும். பட்சணங்கள் செய்வதை எப்போதோ மறந்தாகிவிட்டது.
முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள்? இந்த மாற்றங்கள் முன்னேற்றத்தை காட்டுகிறதா அல்லது நாம் நம் கலாசாரத்தை கை கழுவி விட்டதை குறிக்கிறதா? ஏன் நாம் துரித கதிக்கு மாறிவிட்டோம்? ஆனால ஒரு சிலர் சொல்கிறார்கள். காலசக்கரம் சுழன்று திரும்பவும் நம் கலாசார சிந்தனைகள் மரபுகள் பற்றிய விழிப்புணர்வு இந்த ஜெனரேஷனுக்கு வந்துவிட்டது என்கிறார்கள். மேலை நாட்டு மோகம் குறைவதாகவும் பாரப்பரியத்தில் ஈடுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறார்கள். இளந்தறைமுறையினருக்கு நம் ஆடல் பாடல்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்கிறார்கள். இது நடந்தேறினால் மகிழ்ச்சிதானே?
என்னவோ போங்கள்.. எனக்கு அந்த வாழை இலையில் தமிழ் பாரம்பரிய சமையல் (வடக்கத்திய கலப்படமில்லாமல்) சாப்பாடு பரிமாறும் திருமணங்களை பார்த்து வெகு நாட்களாகிவிட்டன… சப்பாத்தி, பூரி, புலவு அறவே இல்லாமல் மெனு இருந்தால் ஓரக்கண்ணால்தான் பார்க்கிறார்கள். ஒரே நாள் மட்டும் போடப்படும் (நமது வேர்க்கும் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத) கோட்-சூட் இல்லாத மாப்பிள்ளை அழைப்பை நீங்கள் பார்த்து எவ்வளவு நாள் ஆகி இருக்கலாம்!
மாற்றம்தான் மாறாதது என்கிறார்கள். ஏன் நாம் பழைய வேட்டி சட்டை கலாசாரத்துக்கு (கல்யாணத்திலாவது) மாறக்கூடாது?
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நம் கலாசாரத்தை கடைபிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை ஓரளவாவது நாம் காட்டினால், நமது கலாசார சாவை ஓரளவுக்காவது தாமதப்படுத்தலாம்!
பிரஜ்வல் வெற்றிகரமாக நாட்டை விட்டும் வெளியேறிவிட்டார். பாஜக தலைவர் ஜி.தேவராஜே கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் “வீடியோ கிளிப்புகள்” குறித்து பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு “காங்கிரஸ் கட்சி பொதுமக்களின் கவனத்திற்கு இதை லோக்சபா தேர்தல் நேரத்தில் கொண்டு வரலாம், அது பாஜகவின் வாய்ப்புகளை பாதிக்கும்” என்று இந்த வீடியோக்களை குறித்து முன்னரே எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்த பிஸியான பையன் என்ன செய்கிறான் என்பது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ரேவண்ணாவே (அப்பாவும் பிள்ளையில் இந்த விவகாரத்தில் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பது வேறு ஒரு ‘அசிங்கமான’ தகவல்). இது ஐந்து வருடத்திய பழைய கதை என்கிறார்! தேர்தலுக்கு முன்பு வரை தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ், தேவராஜே கவுடா கணித்தது போலவே, என்னவோ இதுபற்றி மகளிர் ஆணையம் பேசியதையடுத்துதான் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்ததாக முதல்வர் சொல்வதை நம்புபவர்கள் குறைவுதான். பிரஜ்வால் செய்ததில் சிறிதளவாவது (வீடியோ ஆதாரத்துடன்) வேறு எந்த குடிமகனாவது செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
பார்வையாலே பலதை சொல்லும் ப்ரஜவால்
பிரஜ்வல் இப்போது வெற்றிகரமாக நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவர் நிறுத்தப்படவில்லை. வரவிருக்கும் சுனாமி பற்றி அவர் காதில் முன்னரே யாரும் ஓதியிருக்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்போதும் பிரஜ்வல் சட்ட அமைப்பால் தண்டிக்கப்படுவார் என்று நினைக்கிறீர்களா? ஒட்டுமொத்த அரசியல் சமூகமும் – பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உட்பட – பிரஜ்வாலை பாதுகாப்பதில் ஒருமுகமாக செயல்பட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?
அதானி, அம்பானி போன்றவர்கள் எப்படி நாட்டின் பெரிய வில்லன்கள் என்று சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகளை பார்த்திருப்பீர்கள். இவர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யும் வேலைகளுக்குத்தான் ஊதியமாக பணம் சம்பாதித்தனர். எவ்வளவு பேருக்கு வேலை் கொடுத்திருக்கிறார்கள்! ஆனால் இந்த பிரஜ்வால் போன்றவர்கள் தனது வாழ்நாளில் ஒரு நாளாவது ஆக்கப்பூர்வமான வேலை எதையாவது செய்திருப்பார்களா?
இது பிரஜ்வல் மட்டுமல்ல. இந்த வகையில் இந்திய பெரு நாட்டில் அரசியல் வகுப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்கள் கற்பனைக்கு எட்டாத அளவு பணக்காரர்கள். உருப்படியான வேலை எதுவும் கிடையாது. இது போல பெண்கள், லாகிரி வஸதுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களை சகட்டுமேனிக்கு செய்பவர்கள். அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, அவர்களின் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை, ஏனெனில் அவர்களின் குற்றங்களும் அவர்களின் பணமும் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றன. அதிகாரமே அவர்கள் கையில்தான். ஏனெனில் அரசு இயந்திரம் அவர்களால்தான் இயங்குகிறது. அனைத்து வழக்குகளும் அவர்களால் ஒருவருக்கு ஒருவர் துணையுடன் மறைக்கப்படுகின்றன என்பதால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படதால் மட்டுமே ஒருவரை நிரபராதி என்று நம்பமுடியாது!
இப்போது இதைப்போல குற்றம் செய்த பல அரசியல்வாதிகளும் உங்கள் நினைவுக்கு வரலாம் என்று நான் நம்புகிறேன்: “பாலிடால், பாத்திமா” கேஸ்களில் உண்மை இல்லை என்று சத்தியம் செய்யமுடியுமா? மான நஷ்ட வழக்குகள் தொடரப்படவில்லை என்பதால் இவற்றை உண்மை என நம்ப நிறைய சாத்திய கூறுகளும் உள்ளன என்று சொல்லலாமா?
பெண்கள் விஷயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் வீக் தான். ஏன். முக்கால்வாசி ஆண்களுமே வீக்தான். சரி. இந்த விஷயங்கள் ‘consenting adults’ சம்பந்தப்பட்டது. அதனால் குற்றமில்லை என்றும் கொள்ளலாமா? இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தி வற்புறுத்தி செய்யப்பட்ட பாலுறவு, குற்றம்தான்.
ஆனால் அரசியல்வாதி மட்டும் அனுபவித்துவிட்டு ஓடிவிடுவதை மற்ற ஆண்களால் தாங்கிக்கொள்ளமுடியால் பொறாமை படுகிறார்களோ? இதே காரணத்தால் வயதான கவர்னர் ஒருவர் கன்னத்தை செல்லமாக தட்டினால்கூட அவர்களால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை? Seeing through tinted glass! ஆனால் N D திவாரி வேறு ஒரு extreme. மனுஷன் 90 வயதுகளிலும் கூட அனுபவித்தாராம். அது கூட ஒருகாலத்தில் பெரிதாக பேசப்பட்டு பின் உப்பு சப்பு இல்லாமல் அடங்கி விட்டது.
இங்கே திராவிட கட்சிகள் இரண்டும் ஒன்றுக்கொள் ஒன்றுதான். பங்காளிகள். சில குடும்பங்களில் எல்லோரும் ஒவ்வொரு கட்சியில் இருப்பார்கள். ‘கான்டாக்ட்டுக்காகத்தான்’. இந்த மாதிரி ஏந்த பிரச்னை வந்தாலும் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்தக் வகையில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
அரசியல் ஒரு சாக்கடை என்று எவனோ ஒரு வேதாந்தி சொன்னதாக ஞாபகம்!
There are many factors that affect the voter turnouts in a free democracy. Some important things are,
Smaller the size of the country or constituency, better voting percentage as the local issues are not only flagged but understood well by the voters. Also they feel their exercise of franchise would make a perceptible impact in the outcome. That is why Loksabha elections might have a lower turnouts than assembly elections, while town councils would have the maximum turnouts!
Economic hardships lead to apathy. Why would one keep off from their daily wages for the sake of voting! Poor countries would generally have lower voter turn outs.
Economic prosperity and stability too would have their own share of higher sense of voter apathy. They feel nothing would change their life – be it Ram or Ravan.
Higher Educational level too has a similar impact – can make one apathetic as nothing could change their life whom-so ever occupy the throne
On the other hand, Policies that had impacted recently or that could make a massive impact, would increase the voter turnouts – due to disgust or enthusiasm. For example 1977 anti emergency. Karnataka and TN assembly elections – freebies and anti-incumbency. If there no burning issues – status quo and lower turn outs.
Feeling a sense of civic duty in democracy – oh. who bothers nowadays – the less said on this the better!
Should voting be made compulsory as in some ‘democracies’? Forcing the subjects to express their ‘free will’? Sounds oxymoron???
Ok. So there are many that are keeping the voters apathetic to voting. Some local factors are not highlighted. Western press remarked, “why should india have the general elections at the peak of its summer especially when there is heat wave? The voter turnout could be awfully low!”
But so far the voter turnouts are not anyway different from other general elections. Also as our minister of external affairs rebuked, “our worst turnouts are generally better than their best”!
In a sound working vibrant democracy, the magic number seems to hover around 65% across the world! Anything lower is apathy. Even a few percentage higher could be ‘wave’!
World wide there is an increasing trend in the life expectancy, Japan leading the list. Reduction of infant mortality has accounted for most of the increased average life span longevity, but since the 1960s mortality rates among those over 80 years have been progressively decreasing by about 1.5% per year. It has not reached the plateau yet even Japan where it is just over 80. India has a long way to catch-up as it is only around mid 70.
During First World War and Spanish flu era, the life expectancy was just 28 years while during Covid times it was well around 70. A tremendous progress in a century, indeed!
The progress being made in lengthening lifespan is entirely due to medical and public-health efforts, rising standards of living, better education and healthier nutrition. It was reported that the advent of different types of antibiotics alone accounted for adding around 8 years to this! No doubt vaccines would have added a few more. World wars, epidemics like Spanish flu and Covid definitely derailed the progress. An estimate puts the impact of covid on reduction of life expectancy at just less than 2 years.
Most of the infectious diseases have been conquered but those of genetic origin like cancers are emerging as threatening demons in this war front! Frailty of old age manifest in most of the cases in many forms of dementia leading to immunity deficiency resulting in blood clots in the brain or lungs or infections such as pneumonia, resulting in death. Medical research is now focusing on these areas that would earn dividends in the not too distant future and add to these numbers!
A theoretical study, estimates with reasonable confidence that average life expectancy could reach 106 years by 2090! Interestingly, studies in animals suggest that lengthening of human lifespan is possible through reducing food consumption, can you believe it?
Old adage which says only an unhealthy human being eats thrice a day while a healthy yogi, only once a day! There are stories of siddhas and yogis living hundreds of years though there are no confirmatory evidences!
But scientifically and biologically speaking, there is something called ‘Telomeres Chromosome’ (DNA) in the cell that protects the chromosome from damage. Each time the cell divides, the Telomeres grows shorter, until the cell can divide no longer. The cessation of cell division causes that particular organ to die.
This means that the rate of cell division decides lifespan. The faster the cell division the faster the arrival of death. Because, there is a limit to cell division.
Faster cell division is directly proportional to faster metabolism, that which allopathic doctors and dieticians consider healthy, because recovery is faster. But they don’t understand that this shortens overall life span.
Faster cell division is also directly proportional to faster breath rate. All that cell wear and tear requires enough oxidisation, so, breath rate is high with faster metabolism. Faster cell division is also directly proportional to faster heart rate. Faster metabolism means faster heart rate. Faster heart rate is required to carry oxygen to the dividing and regenerating cells.
Faster cell division is also directly proportional to over-eating, because the dead cells need nutrition to divide and regenerate. Or, simply overeating exhilerates cell division, heart rate and breath rate, shortening lifespan. Fasting slows down cell division and prolongs life span. Yoga also means fasting. Samadhi is unachievable without fasting as eating triggers heart rate to digest the food.
Higher heart rate also means an agitated mind, because the blood rush in the brain causes the mind to race giving anxiety, depression, aggression, etc. Meditation means cessation of thoughts, and that which is possible only with the least heart rate and breath, because blood rush in the brain agitates the mind.
If the average heart beat of a person is 80 beats per minute and average age is 80 years, then a Yogi, whose average heart rate is 40 beats per minutes will live for 160 years. There is an inverse relation here.
This is why Yogic science suggests that slower breath rate results in longer life span. (They say, even dogs that pant have shorter life spans.) Yoga advises us to keep our heart rate minimum. Real ancient Yogis could bring their heart rate as low as 4 to 6 beats per minute where the breath almost stops, in the state of ‘Samadhi’. When the body has almost shut down with the least requirement of energy, it can survive on the oxygen residue in the red blood corpuscles without breathing for a long time.
Does it look too impractical? What is the point in living if you deny satisfying your taste buds altogether? But on the other hand who does not want to live long? To wriggle out of this conundrum, as of now … as a compromise, eat less, that is less calories and may be live reasonably long and healthy! With this magic wand you can optimise the suffering in the dawn of the life – senility span might be less too!
The development of an ancient village in India would typically be around a temple with inner circle around it housing Brahmins or Pujaris and the other areas demarcated based on profession. Marriages are discouraged between communities of different professions. This was the basis of ‘jathis or castes’ that evolved over centuries of civilisation in this country.
With Industrial Revolution and explosion of knowledge, institutions of eduction evolved cutting across the different castes as the demand for Human Resources expanded. Recognition for Innovations attracted talents from conventional ethnic professional groups. This led to egoist clash of ideologies between the old and new culture as the fruits of growth are thought to be not equitably shared!
The tension got compounded with the arrival of new abrahamic religions that are ambitious to expand their footprints. Movement of groups between nations for purposes of trade led to ethnic settlements that were eager to preserve their identities as well. This has become the canvas for the management of politics of a modern nation!
Naturally this racial dynamics would strongly influence a nation’s peace and harmony. Take for instance the case of Singapore. In the founding years, the then Prime Minister Lee Kuan Yew pulled the nascent city through the tumult of ethnic riots. Lee saw the riots as products of the city’s segregation, and in turn, racial and religious integration as key to Singapore’s peace, prosperity and progress. To promote racial harmony, Singapore eliminated conclaves that are driven by ethnic identity. A typical housing complex in Singapore is legally bound to have a mixed ethnic composition! So one builds comradeship with other ethnic groups through unavoidable interaction over a period of time! This promotes harmony in the society.
Can india emulate such a model of housing colonies with multicultural inhabitants? This needs tolerating and respecting others choices. The major resistance would be the cooking – some are so averse to stenches of fish, pork etc., some are religiously opposed to beef and pork; it would be impossible to make them cohabitate. In Singapore the racial laws are strict and enforced without any bias. In other democracies, it is just impossible!
So it would be unthinkable for india to move towards such a society! Then how to bring down racial tensions? Respect each other culturally. Avoid mistrusts. Punish racial discrimination and abuse of religion without fear or favour or nepotism!
But, the naked truth is racial discrimination is all pervading – be in Islamic east or the so called ‘developed’ west! The Middle East is a boiling cauldron since ages. Is there a country where there is only a single race? Or else there would be only small islands of ‘Singapore’ where there is ‘enforced’ racial harmony!
We only believe we have culturally developed even though we fail to respect others’ culture! We can only dream of such a peaceful world!
கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்தைகுட்டியோட இருப்பது சந்தோஷ வாழ்க்கையா – இல்லை தனியாக வாழ்க்கையை நம் இஷ்டப்படி கழிப்பது சுகமா? பெண்டாட்டியாலோ, கொழந்த குட்டிகளாலோ கஷ்டப்படும்போது ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று பலர் நினைப்பதுண்டு! ஆனால் வெயிலின் கொடுமை நிழலில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை சந்திக்கும்போது சாய்ந்து கொள்ள பந்தங்களின் தோள் கிடைக்குமே அப்போது, இந்த அன்றாட சஞ்சலங்கள் ஜுஜுபி. சம்ஸார வாழ்வில் மேடுபள்ளங்கள் இருப்பதுதான் இயல்பு. சந்தோஷமும் கஷடங்களும் மாறிமாறி வந்தால்தான் சுகம். எப்போதுமே சுகமாக இருக்க விழையும் வாழ்வு ஒரு கானல்நீர் தான். ஆயினும் சம்சார வாழ்வில் கஷடப்படாமல் இருப்பவர்களில் சிலர் கூட அவ்வப்போது வெளியில் சுகத்தை தேடுவது ஏன்? உறவினர் ஏச்சுக்கு பயந்துதான் பலர் பிறழவில்லை என்பதுதான் என் கணிப்பு. எனவே சமுதாய நலத்துக்கு கல்யாணம் என்ற பந்தம் அவசியமோ? பந்தங்கள் திருமணத்தால் அதிகரிக்கின்றதல்லவோ?
ஆனால் இன்றைய சமுதாயத்தில் தனிமனித சுதந்திரத்திற்குத்தான் முக்கியத்துவம் அதிகம். ஓரின வாழ்க்கை, living together என்ற கலாசாரங்களை சமுதாயம் அவ்வளவாக தவறாக எண்ணாத காலகட்டம். இதனால் கல்யாண பந்தம் அனாவசியம் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. குழந்தைகளை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது பரவலாக தென்படுகிறது. இது சமுதாயத்துக்கு பெரும் பின்னோட்டமாகலாம். ஏனெனில் சமுதாயத்தின் நலத்துக்கு மக்கள் தொகை குறையக்கூடாது. சராசரி வயதும் ஒரளவுக்கு நிலையாக இருந்தால்தான் சமுதாயத்துக்கு நல்லது. தனித்து வாழ்பவர்களுக்கும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட சமுதாயம்தான் தேவைப்படுகிறதே? ஆகவே இந்த புதிய கலாசாரம் அதற்கு உலை வைக்கும்!
கல்யாண பந்தம், குழந்தைகளை அளவோடு பெற்றுக்கொள்வது அவர்களை நல்ல குடிமகன்களாக ஆக்குவது என்பது தனிமனிதர்களைக்காட்டிலும் சமுதாயத்தின் நலத்துக்கு மிகவும் அத்தியாவசியம். எனவே தனிமனிதனின் சுமையை சமுதாயமும் பகிரவேண்டும். இப்போதைய சட்டதிட்டங்களும், பொருளாதார கொள்கைகளும் சமுதாயம் தனிமனிதனின் பொறுப்பாக தட்டிக்கழிப்பது, மிகவும் தவறான நிலைப்பாடு. காலா காலத்தில் கல்யாணம், குழந்தை என்பதுதான் நல்வழி. சமுதாயத்தின் இப்போதைய பிறழ்வை சரிசெய்வது தமுதாயத்தின் தலையாய பொறுப்பு. குறுகிய கால சந்தோஷத்திற்காக வருங்காலத்தை இழந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை வழிப்படுத்த வேண்டியது நம் எல்லோரின் இன்றைய கடமை!
எனவே கஷடமோ நஷ்டமோ கல்யாணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளை பெற்று சமுதாயத்திற்கு நம் கடமையை செய்யவேண்டும். சமுதாயம் மற்றதை பார்த்துக்கொள்ளும் என்று (கடவுள் மேல் பாரத்தை போட்டு) வாழ்க்கையை தொடர்வோம்!
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ‘நந்தனார்’ சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றபோது, நந்தி தெய்வத்தைத் தரிசனம் செய்ய ஒதுங்கிச் சென்றதாக நம்மில் பலர் நம்புகிறோம்! ஆனால் அந்த சம்பவம் வேறு ஒரு கோவிலில் நடந்தது. இதோ அந்த சரித்திரம்:
‘நந்தனார்’ தமிழ்நாட்டின் சிதம்பரத்திற்கு தெற்கே 34 கிமீ தொலைவில் உள்ள மேற்கட்டாதனூர் (தற்போது மேலநல்லூர்) கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) குடும்பத்தில் பிறந்தார். வேதியர் சாதியைச் சேர்ந்த நில உரிமையாளரிடம் கொத்தடிமையாக வேலை செய்து வந்தார். தீண்டத்தகாதவராக, நந்தனார் கிராமக் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அதைத் தரிசிக்க ஆசைப்பட்டார், மேலும் சிறிது தூரத்தில் இருந்து யாழ் (ஒரு கருவி) வாசித்து பக்திப் பாடல்களைப் பாடினார். அவர் திருப்புங்கூர் கோயிலில் உள்ள சிவலோகநாதசுவாமியை வழிபட விரும்பி, ஒரு நாள் அங்கு சென்றடைந்தார். அவர் கோவிலுக்கு வெளியே நின்று உள்ளே இருக்கும் லிங்கத்தைப் பார்க்க முயன்றார், ஆனால் நந்தியின் ஒரு பெரிய உருவம் அவரது பார்வையைத் தடுத்தது. சிவனின் கட்டளையின் பேரில், நந்தனார் லிங்கத்தை தரிசிக்க, நந்தி சில அடிகள் வலப்புறமாக நகர்ந்தார் என்று கூறப்படுகிறது.
மகிழ்ச்சியுடன் தனது கிராமத்திற்குத் திரும்பிய நந்தனார், தில்லை (சிதம்பரம்) செல்வதில் உறுதியாக இருந்தார். ‘நாளைக்குப் போகிறேன்’ என்று தினமும் சொல்வார், இதனால் திருநாளைப் போவார், அதாவது ‘நாளை போகிறவர்’ என்று பெயர் பெற்றார், இன்றும் அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகிறார். கடைசியாக அவர் தனது நில உரிமையாளரை அனுமதிக்காக அணுகினார், அவர் தனது சொந்த சாதியின் கடவுள்களை வணங்கும்படி கூறினார். அவரது சொந்த சமூகத்தவர்களும், உயர் சாதிக் கடவுள்களை விட்டு விலகச் சொன்னார்கள். ஆனால் ‘நந்தனார்’ விடவில்லை. ஒரே நாளில் 40 வேலி நிலத்தில் (250 ஏக்கர்) நெல் நடவு செய்தால் அனுமதிப்பதாகக் கூறிய நில உரிமையாளரிடம் மீண்டும் ஒருமுறை கேட்டார், இது முடியாத காரியம். சிவன் அருளால் அது நடந்து நந்தனார் சிதம்பரத்திற்குப் புறப்பட்டார்.
இங்கும் அவரால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை, ஆனால் இறைவன் அவருக்கும், கோவில் தீட்சிதர்களுக்கும் கனவில் தோன்றி, ‘தீக்குளியல்’ மூலம் சுத்திகரிக்கப்பட்ட பிறகு அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தீட்சிதர்கள் ஒரு ஹோமகுண்ட நெருப்பைக் கட்டினார்கள், அதில் அவர் நுழைந்தார், மேலும் அதிலிருந்து ஒரு பிராமணரைப் போல முடி மற்றும் புனித நூலால் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கோயிலுக்குள் நுழைந்து நடராஜப் பெருமானுடன் இணைந்தார்.
நந்தனார் உண்மையில் எரித்து இறந்தார் என்றும், தில்லையில் நுழையவே இல்லை என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நந்தனார் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக்கூடும். அப்போது லிங்கமாகத்தான் ப்ரதிஷ்டை செய்திருக்கப்படவேண்டும். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘பெரியபுராணம்’ இவர் சரித்திரத்தை விவரிக்கிறது. நடராஜர் வடிவ சிலையாக 11 ஆம் நூற்றாண்டில்தான் சோழர் ஆட்சியின் போதுதான் செம்பியன் மாதேவியால் உருவானது. அந்தக் காலத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயம், அதன் இன்றைய பிரம்மாண்டத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இப்போதைய அமைப்பில் நந்தியும் நடராஜரின் கனகசபையும் ஒரே நேர்பார்வையில் இல்லை என்பது மட்டுமல்ல இடையே ஒரு பெரும் சுவரே உள்ளது.
எனவே நந்தனார் சிவனை தரிசனம் செய்ய ஏதுவாக நந்தி நகர்ந்த தலம் திருப்பூங்கூர் தானே தவிர சிதம்பரம் அல்ல! திருப்பூங்கூர் கோயிலில் நந்தி சிற்பத்தின் அமைப்பை பார்த்தால் இதை தெளிவாகக் உணரலாம்!
ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுர வடிவமைப்பு மற்ற கோபுரங்களைவிட வித்தியாசமானது என்று சொல்கிறார்கள். இந்த முறை நான் சமீபத்தில் அங்கு சென்றபோது அதை சிறிது ஆராய்நதேன். மற்ற கோபுரங்கள் ட்ரபீசிய வடிவில் இருக்கும்: அடிப்பாக முனையும் மேல் முனையும் நேர்க்கோட்டில் இணைக்கும் வகையில் பக்கங்கள் இருக்கும். ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் அந்த முனைகள் ஒரு கயிறால் இணைக்கப்பட்டால் போல் நடுவில் ஒரு இடத்தில் தொய்வு இருக்கும். இதை catenary வடிவம் என்று geometryயில் சொல்வார்கள். இது ஒரு சங்கிலியை இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டினால் தொங்குமே அந்த வடவமைப்பு. மேல் புள்ளியையும் அடிப்புள்ளியையும் சங்கிலியால் கட்டிய வடிவம் போல் தோன்றுவதை படத்தை உற்று நோக்கினால் நன்றாக விளங்கும்.
இந்த வடிவத்தில் கோபுரத்தின் நான்கு பக்கங்களும் அவ்வாறு அமைய, ஒவ்வொறு அடுக்கையும் எவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு அமைத்திருக்கவேண்டும்? பாண்டிய மன்னன் வல்லபதேவன் உதவியுடன் 8ஆம் நூற்றாண்டில் பெரியாழ்வார் கட்டியதாக சொல்லப்படும் இந்த கோபுரத்தை கட்டமைக்க அவர்கள் என்னவென்ன உபகரணங்களை பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை நினைத்தாலே வியப்பாக உள்ளது. அந்த தொழில்நுட்பத்தை நாம் எப்படி, ஏன், எங்கு தொலைத்தோம்…?
இந்த கோபுரம்தான் தமிழக அரசு இலச்சினையில் உள்ளது என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் சிலர் அது மதுரை மேற்கு கோபுரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும் 1948இல் இந்த இலச்சினியின் மாதிரியை அந்நாளைய பிரதமர் நேருவிடம் காண்பித்தபோது அவர், இது ஒரு மதத்தை சார்ந்து உள்ளது என்று ஆட்சேபித்ததாகவும், அப்போதைய மாநில முதல்வர் குமாரசாமி ராஜா, அது மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் உள்ளது எந்த ஒரு மதத்தையும் அல்ல என்று வலிறுத்தி, அதிகாரபூர்வ இலச்சினையாக ஆணை பிறப்பித்ததும் ஒரு முக்கிய தகவல்.
அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். இதை பார்த்துக்கு பிறகு யார்தான் நமது விஞ்ஞான அறிவு தாழ்ந்தது என்று கூறமுடியும்? நமக்கு தொழில்நுட்ப அறிவு ஆங்கிலேயரால்தான் கிடைத்தது என்று திடமாக நம்பும் அசடுகளிடம் இந்த கேள்வியை கேளுங்களேன்!