முதுமையை வெல்வரும் உண்டோ?

இணையத்தில் ஒரு சிறுகதை – நம் பலருக்கும் இது கதையாக இருக்காது – தத்தம்வாழ்க்கையில் கண்ட ஒரு நிஜ நிகழ்வாகவும் இருக்கலாம்!

எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை…

இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார்.

இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய் விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள்.

சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. அவர் முன்னாளில் எப்பொழுதோ வாங்கிய நிலம் நல்ல மதிப்பு மிக்கதானது. தன்னை வெல்ல யாரும் இல்லை என்றும் மற்றொரு நாள் சொல்லி சென்றார், பெருமிதமாகவே இருந்தார்.

2,3 வருடங்களுக்குள்ளாகவே அவருடைய பேச்சில் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. எதையோ தொலைத்தது போல வெறிச்சிட்ட கண்கள். “என்ன சார் எப்படி இருக்கீங்க” என்ற கேள்விக்கு, முன்னைப் போல பளீர் சிரிப்பு இல்லை, “இருக்கிறேன் டாக்டர்”, என்ற ஒற்றை வரி பதில் வந்தது. அவரை தேற்றும் விதமாக அப்புறமா, பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு ஆரம்பித்து வைத்தேன்.

எல்லோரும் நல்லா இருக்காங்க சார், ஆனால் ரொம்ப பிஸியா இருக்காங்க. நமக்கு கூட ஒரு ஆள் இல்லேன்னு வருத்தமா இருக்கு.

அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குல சார், பாவம் என்ன சூழ்நிலையில் இருக்காங்களோ…

எல்லோரும் ரொம்ப பாசக்காரங்க தான் சார், ஆனால் காலம் எல்லொரையும் கட்டி போட்டு வச்சிருக்கு. ஒருத்தரோட ஒருத்தர் நேரம் செலவழிக்க முடியாம பஞ்சா பறக்குறாங்க. கேட்டால் அமெரிக்கா வா, பூனே வாங்குறாங்க. நமக்கு எதுவும் செட் ஆகுறதில்ல சார். இப்படியே ஓட்டிட்டிருக்கேன். என்றார்.

அவங்களும் சம்பாரிக்கணும் செட்டில் ஆகணும்ன்னு ஒரு எண்ணம் இருக்கும்ல சார்…?

அதான் சார் புரியல, அவங்க வாழ்க்கை முழுக்க ஓடி சம்பாதித்தாலும் சேர்க்க முடியாத சொத்து எங்கிட்ட இருக்கு. நானே கொடுத்தாலும் அது இப்போ அவங்களுக்கு தேவைப்படாது போல.. எதன் பின்னால ஓடுறாங்கன்னே தெரில. எல்லோரும் ஒரே ஓட்டமா ஓடுறாங்க, வாழ்க்கையை புரிந்து கொள்ள எல்லோருக்கும் 65 வயது ஆகணும் சார் என்று சிரித்தார்..

நடுவில் பார்க்கின்சோனிசம் பாதித்தது, அப்பொழுதும் மனிதர் அசரவில்லை வயதானால் வருவது தானே இதெல்லாம் பிரச்சனை இல்ல சார் என்பார். பெரிய வேடிக்கை என்னவென்றால் மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்த நோயின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். அவரின் மன உறுதிக்கு முன்னால் நோய் கொஞ்சம் தோற்று தான் போனது.

சில காலத்துக்கு பின் முன்பு மிகவும் தளர்ந்து போய் இருந்தார் அவர் மனைவி துணையாக கூட்டி வந்தார், தன்னுடைய மூத்த மகன் பைக் ஆக்சிடென்ட்டில் திடீரென்று இறந்ததை சொன்னார், பாவமாக இருந்தது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சார் பையன் திடீர்னு போய்ட்டான் சார், ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்றார், நான் அவர் மனைவியிடம் அவரை எப்படியாவது தேற்றுங்கள் இல்லையென்றால் நோயின் கடுமை அதிகரிக்கும் என்பதை சொன்னேன். அவர் மனைவி மார்பக புற்று நோயால் பாதிக்கபட்டு மார்பகத்தை இழந்திருந்தார், அவரை ஆதரித்து அணைத்து கூட்டி சென்றதை பார்க்கும் போது சிறிது நிம்மதியாக இருந்தது.

எதிர் பார்க்காத அளவில் மிக விரைவாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டார். மகனின் மனைவியை டீச்சர் ட்ரைனிங் படிக்க வைத்தார் மகனின் வேலையை மருமகளுக்கு வாங்கி குடுத்தார், தன் பேத்திக்கு (இறந்த மகனின் மகளுக்கு) திருமணம் முடித்து வைத்தார். மருமகளிடம்,” வேலை வாங்கி கொடுத்தாயிற்று இனி உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள். நீ திருமணம் முடித்தாலும் எங்களுக்கு சம்மதமே” என்று அவர்களுடைய தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். எல்லாம் சரியாக தான் இருந்தது.

மூன்று மாதம் முன்பு மறுபடி தம்பதி சமேதராக வந்தார்கள், மகன் தங்களுக்கு விசா அனுப்பி உள்ளதாகவும், ஆஸ்திரேலியா போவதற்கு முன் உடம்பை செக் அப் செய்ய வந்தோம் என்றார்கள் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தேன்.

அப்போது சென்றவரை வெகு காலத்திற்கு பின் இன்று காலையில் தான் மீண்டும் பார்த்தேன். நடுங்கிய படி அமர்ந்தார், என்ன செய்கிறதென்று கேட்டேன். பதில் இல்லை ஏதோ தப்பு இருக்கிறது என்று புரிந்தது. அவர் அழுதால் என்ன சொல்வது என்று என் மனதின் மூலையில் ஒரு கேள்வியும் இருந்தது. அதனாலேயே என்னால் அவர் முகம் பார்க்க முடியவில்லை, மீண்டும் கேட்டேன், என்ன சார் உடம்புக்கு ரொம்ப முடியலையா என்று? என்னை சில நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு பிறகு சொன்னார் டீச்சர் என்ன விட்டு போய்ட்டா. அதனால திரும்ப தண்ணி அடிக்கிறேன் உடம்புக்கு முடியல என்றார்.

அந்த அதிர்ச்சியை என்னால் உள்வாங்கி கொள்ள முடியவில்லை 7 வருடங்களாக அவரை ஆட்கொண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்த பார்கின்சோனிசம் நோய் இப்பொழுது 2 மாதங்களில் அவரை முழுமையாக சேத படுத்த ஆரம்பித்திருப்பது தெரிந்தது, தொடர்ச்சியாக பேச இயலவில்லை, நேராக நிற்க இயலவில்லை.. நடுங்காமல், தடுமாறாமல் நடக்க இயலவில்லை அனைத்தும் 2 மாதங்களில், தனிமை இனி இவரை என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை.

மனைவி இருக்கும் போது தெரியல சார். பேப்பர் எடுத்து குடுக்க ஆள் இல்லை, தண்ணி குடுக்க ஆள் இல்லை, தனியா இருக்கேன் டாக்டர். மக கல்யாணம் பண்ணி போய்ட்டா, மருமகளுக்கு இப்ப என்ன பாக்க முடியாது, மகன் ஆஸ்திரேலியால இருக்கான். என்ன பண்றதுன்னு தெரியல என்றார். எனக்கு தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை சொன்னேன்… இவரால் இனி நடக்க இயலாது.. இவருக்கு கவலை அதிகமாக ஆக இவர் நோய் இவரை மெல்ல ஆட்கொண்டு ஆள் கொல்லும். அதனால் இவரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று யாரிடம் இப்போ நான் சொல்வது??

நல்ல வேலை அவர் அழவில்லை, நானும் உடன் அழுது விடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ?? அனைவரும் டீச்சர் என்றாரே. முதுமை நமக்கும் வரும் என்று டீச்சர்களுக்கு யார் பாடம் எடுப்பது? இவரால் இனி இது போல் மீண்டும் ஒரு முறை என் மருத்துவமனைக்கு வர இயலுமா தெரியவில்லை..

வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரை போல மேலே எழும்பி கீழே இறங்கி நமக்கு பல்வேறு அனுபவங்களை தருகிறது. அதில் மகிழ்ச்சியும் இருக்கும் அதிர்ச்சியும் இருக்கும். அனைத்திற்கும் தயாராக இருக்க பணம் மட்டும் போதுவதில்லை. அன்பாக அரவணைக்க, ஆறுதலாக பேச சக உயிர் வேண்டும். உறவுகளில் மட்டுமே அது சாத்தியமாகிறது.

உடன் பிறந்தவர்களோ.., கை பிடித்தவர்களோ ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் அளிக்காமல் வாழ்க்கை முழுதும் எதன் பின்னால் ஓடுகிறோம்…? யாருக்காக ஓடுகிறோம்?? வாழ்க்கையை துவங்கும் போது எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கிறது. சக மனிதனை விட ஒரு படி முன்னேறி விடும் வெறி இருக்கிறது. எல்லோரும் வெற்றியை நோக்கி ஓடுகிறோம். இலக்கை அடைந்தோமா?? எது தான் இலக்கு?? நமது ஓட்டத்தை எப்போது நிறுத்துவது??

ஓடிக் களைத்து, சோர்ந்து நிற்கும் போது எல்லையில்லா ஒரு பெருவெளியில் மாட்டிக் கொண்டதை உணர்வோம். நமது அனுபவத்தை கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். இதுவரையிலும் பலர் சொல்வதை நாமும் கேட்கவில்லையே…!!

ஒரு கதையின் முடிவையோ சினிமாவின் முடிவையோ அவ்வளவு ஏன் ஒரு எலெக்ஷன் முடிவைக்கூட கூட யூகித்து சொல்ல முடியும் நமக்கு, நமது வாழ்வின் இறுதி எப்படி இருக்கும் என்று யூகித்து அதற்கு தயாராவதில் என்ன தயக்கம்?

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்வு தான், அது பெரும்பாலும் எப்படி முடியும் என்பதை யூகிக்க நமக்கு பெரிய கஷ்டம் எதுவும் இருக்க போவதில்லை. ஆனாலும் நாம் அதற்கு துணிவதில்லை. நம் முடிவுக்கு நாம் தயாராக இருந்திருந்தால், இன்று பல்வேறு நகர்புறங்களில், பூட்டிய வீட்டினுள் வாரக்கணக்கில் கண்டு கொள்ளப்படாமல் இறந்து, நாறிக் கிடக்கும் பெரியவர்களை பற்றி கேள்விப்படுவோமா?? அவர்களை பற்றி விசாரித்தால் வசதியானவர்களாகவும், அவர்களின் சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிகிறது, எனில், இந்த முதியவர்கள் ஓடிய ஓட்டத்தின் பலன் என்ன?

கிராமங்களில் முதியோரை அரவணைக்கும் இடமாக சாவடிகள் இருந்தன. ஒரு வயதுக்கு மேல் முதியோர் ஒன்று கூடும் இடமாக அவர்களுக்கு சமூகம் புகழிடம் அளித்திருந்தது. இன்று அவையும் வழக்கொழிந்து விட்டன. மருத்துவ வசதிகளால் பெருகி வரும் முதியோர்களுக்கு அவர்களின் உயிர்த்திர்த்தலே பெரும் பிரச்சனையாகி இன்று அவர்களை தனிமையில் இருந்து மீட்க முதியோர் காப்பகங்களே மிச்சமிருக்கின்றன.

நாம் ஓட்டத்தை முடித்து எல்லைக் கோட்டை தொடும் போது, போதுமான ஓய்வும், தாங்கி பிடிக்க உறவுகளும் இருக்க பயணம் முடிய வேண்டும். அப்படியில்லை என்றால், நன்றாக ஓடிய ஒரு மராத்தான் வீரர் எல்லைக்கோட்டருகே சறுக்கிய கதையாக தான் நம் பயணம் முடியும்.

வாழ்வதற்கான திட்டமிடல் போல வாழ்க்கையின் இறுதிக்கான திட்டமிடலும் அவசியம். காசு பணம் சேர்ப்பது போல நண்பர்களையும் உறவுகளையும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், சமூகத்துக்கு பங்களிக்க வேண்டும் அதுவே இறந்த பின்னும் நம்மை பலர் மனதில் வாழ வைக்கும்……

முதுமையை வெல்ல முடியாதுதான் – ஆனாலும் உறவுகள் நண்பர்கள் துணையுடன் ஓரளவுக்காவது தொய்யாமல் கடக்கலாமோ?

Adani and Panchali

Capital intensive infrastructure projects have long gestation periods; and risky too! Not surprising that many eyes would have battered when Adani expanded in just a couple of decades with an exponential growth! Surely, Ambani’s example can’t be cited as textile and hydrocarbon sectors are at the other end of the risk spectrum.

Why then capital markets favoured Adanis? Is it just a coincidence that the spectacle is after Modi took over the reigns! To ward of such doubts, the doubting Thomases could have resorted to remedies such as SEBI or Parliamentary debates over these long years! But why a Hindenburg is required to wake you up? Yes, this episode could be something more than that meets the eye.

Obviously Adani stocks were over heated anyway either by the bullish fever expecting Adani would succeed! Who would not bet on a winning horse? Such temptations are not uncommon in the capital market! It is the reason why it attracts huge venture capitalists! It is a healthy trend from the point of view of technology forecasting or assessing organisational acumen of entrepreneurs!

There are also manipulative traders who prop up the stocks, which only a watchful regulatory mechanism can keep under check. Apart from this freelance economists and a genuinely competitive market, aid in timely blowing out such bubbles! Are these not enough checks and balances?

Whether Hindenburg –Adani tussle is a noise in the ever envious and unethical business world or a timely warning to improve the rules of the Indian regulatory institutions? This question apart, I genuinely wonder why should Supreme Court admit pleas and seriously look into this ‘affair’!

In the great epic ‘Mahabharat’, game of dies was duly played as per ‘rules of the game’ – the winner takes the possession at the end – though he is empowered to manage the asset, ‘Panchali’, as per his wishes, the public disrobing of Panchali is feverishly discussed even today. This ‘unethical’ act could not be ruled ‘illegal’ by a learned court. There are many things in real life that are only white or black, but grey too!!!

Is SC overdoing for being accused and apprehensive of public trial for leaning towards ‘Modi’ by the vocal media. Even the bitter Modi biter, the never die Karan Thapar, could not get a word of support for the report, from an expert Prof Ashwath Damodaran, other than criticism that ‘nothing would come out the so called ‘expert committee’ of SC. Experts deliberate for hours but would not come to any practical conclusion especially on a slimy subject like this!

If you are the world’s fifth largest economy, foreign investors would continue to throng the market – no options – greed would win over everything else. Gullible would lose but big fishes would make tons of money – even Hindenburg would, they are short sellers after all. Bulls and bears have shortest of memories – Indian businesses would be stronger even from such episodes!

Yes! The tree that bears fruits only would be stoned – காய்க்கும் மரமே கல்லடி படும். Adani should be happy to have attracted the ‘attention’ though for the wrong reasons!

https://www.youtube.com/live/QURrVv6r0sc?feature=share

நாளை என்பது கனவாகலாமோ?

இரவு படுக்கையில் எப்போதும் போல் phoneஇல் மேய்ந்து கொண்டிருந்தேன். எங்கள் Engineering நண்பர்கள் வாட்ஸ்ஆப் group இல், நண்பன் ராமநாதன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்திருந்தான் ‘தினமும் walking போகாமல் இருந்தால் இதயநோய் உண்டோ இல்லையோ, ஒரு பெரிய தலைமுதல் கால் வரை வியாதி லிஸ்ட் கொடுத்து அதில் ஏதோ ஒன்றாவது நிச்சயம்’ என்பதுதான் அது. ஏதோ நம்ப குப்பனோ -சுப்பனோ – பாட்டியோ சொன்னால் நம்ப மாட்டோம்னு பெரிய வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கோள் காட்டி இருந்தது அந்த தகவல்.

பதவி ஓய்வு பெற்ற பிறகு அந்த அளவு நடக்கவில்லயோ? உடனே மனதுக்குள் ஒரு resolution, நாளை முதல் காலை பால் வாங்க போகும்போது ரெண்டு தெருவாவது சுற்ற வேண்டும்.
‘பனியாக இருக்கு, கொஞ்சம் லேட்டாதான் போகலாமோ? நோ…நோ… உடம்பு ஆரோக்கியம்தான் முக்கியம்’. பையைமாட்டிக்கொண்டு மில்க் பூத்தில் பால் பாக்கெட்கள் வாங்கி, அப்படியே தூரத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப்போய் பேப்பர் வாங்கி மெதுவாக நடந்து வந்ததில் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. முதல்நாள் இது போதும். ஒரு தீர்மானத்துடன் நடை கட்டி வீடு திரும்பினேன்.
தெருமுனையிலிருந்து மெதுவாக வீட்டுப்பக்கம் திரும்பினால் ‘என்ன ஆயிற்று? வீட்டில் கூட்டம். பதட்டத்தோடு நுழைந்தால் பெட்டில் நான் கண்ணை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். ஆனால் ஏன் டாக்டர் பல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்? ஏன் ‘ஆம்புலன்ஸ் call பண்ணுங்கள்’ என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் வாங்கி வருவதற்குள் இவ்வளவு களேபரமா? ஒரு doubt? நான்தான் பால் வாங்கி வந்தேன் என்றால் படுக்கையில் இருப்பது யார்? கண்ணாடியில் போய் பார்க்கலாம், அப்போது தெரியும் நான் நான்தானான்னு…oh my god… கண்ணாடியில் ஏன் என் முகம் தெரியவில்லை? ஐயோ … நான் ஆவி ஆகி விட்டேனா? Wife கிட்டக்க password எல்லாம் எங்க store பண்ணியிருக்கேன்னு சொல்லலையே? அவ்வளவு பணமும் ஸ்வாஹாவா?
‘அப்பா இப்படித்தான்மா… எப்பவுமே ஒழுங்கா ஒரு காரியமும் பண்றதில்ல’. பெண் சொல்லப்போவது இப்போதே காதில் கேட்கிறது. ‘அப்பா நீ எப்பவும் எல்லாத்தையும் இப்படி கரெக்டா செய்யறே… அம்மா மட்டும் எப்படிப்பா?’ அப்படின்னு சொன்ன பொண்ணா இது?


‘மணி ஏழரை ஆறது. இன்னும் என்ன தூக்கம்? பால் வாங்கிண்டு வாங்கோ?’ திடுக்குன்னது.. அப்ப நான் இன்னும் சாகலையா? போனதெல்லாம் கனவா? Thank god….there is no crowd, no doctor, no ambulance either… பால் பை எங்கே?
Walking…. ஊகும். இன்னிக்கு வேண்டாம், நாளைலேர்ந்து நிச்சயம் வாக்கிங் உண்டு.
சாரி ராமநாதா!

Would the Bard of Avon even be able to stand before the Poets of Sanskrit era?

The Shishupala Vadha (शिशुपालवध, is a work of classical Sanskrit poetry composed by Māgha in the 7th or 8th century. It is an epic poem in 20 sargas (cantos) of about 1800 highly ornate stanzas, and is considered one of the five Sanskrit mahakavyas, or “great epics”. It is also known as the Māgha-kāvya after its author. Like other kavyas, it is admired more for its exquisite descriptions and lyrical quality than for any dramatic development of plot.

The entire 16th canto, a message from Shishupala to Krishna, is intentionally ambiguous, and can be interpreted in two ways: one favourable and pleasing (a humble apology in courteous words), the other offensive and harsh (a declaration of war). For instance:


कृतगोपवधूरतेर्घ्नतो
वृषमुग्रे नरकेऽपि संप्रति ।
प्रतिपत्तिरधःकृतैनसो
जनताभिस्तव साधु वर्ण्यते ॥

which can mean either of:

You delighted the cowherds and their wives by killing Demon Buffalo and cracking down on crime. Now your action against the formidable demon Naraka is winning the enthusiastic approval of the people.

Or

By having sex with the wives of the cowherds you acted criminally and slaughtered justice. Now that your career has hit rock bottom, the people say you got what you deserved.

The 19th canto, especially, like the 15th canto of Kirātārjunīya, contains chitrakavya or decorative composition, with many examples of constrained writing. Its third stanza, for instance, contains only the consonant ‘j’ in the first line, ‘t’ in the second, ‘bh’ in the third, and ‘r’ in the fourth:


जजौजोजाजिजिज्जाजी
तं ततोऽतितताततुत् ।
भाभोऽभीभाभिभूभाभू–
रारारिररिरीररः ॥

“Then the warrior, winner of war, with his heroic valour, the subduer of the extremely arrogant beings, he who has the brilliance of stars, he who has the brilliance of the vanquisher of fearless elephants, the enemy seated on a chariot, began to fight.”

He progresses to just two consonants in the 66th stanza:

भूरिभिर्भारिभिर्भीराभूभारैरभिरेभिरे ।
भेरीरेभिभिरभ्राभैरभीरुभिरिभैरिभाः ॥

“The fearless elephant, who was like a burden to the earth because of its weight, whose sound was like a kettle-drum, and who was like a dark cloud, attacked the enemy elephant.”

By the 114th stanza, this is taken to an extreme, with a celebrated example involving just one consonant:

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥

“Sri Krishna, the giver of every boon, the scourge of the evil-minded, the purifier, the one whose arms can annihilate the wicked who cause suffering to others, shot his pain-causing arrow at the enemy.”

The same canto also contains increasingly ingenious palindromes. The 44th stanza, for instance, has each line a palindrome:

वारणागगभीरा सा साराभीगगणारवा ।
कारितारिवधा सेना नासेधा वारितारिका ॥

“It is very difficult to face this army which is endowed with elephants as big as mountains. This is a very great army and the shouting of frightened people is heard. It has slain its enemies.”

The 88th stanza is a palindrome as a whole (syllable-for-syllable), with the second half being the first half reversed. This is known as pratiloma (or gatapratyāgata) and is not found in Bharavi:

तं श्रिया घनयानस्तरुचा सारतया तया ।
यातया तरसा चारुस्तनयानघया श्रितं ॥

The 34th stanza is the 33rd stanza written backwards, with a different meaning. Finally, the 27th stanza is an example of what has been called “the most complex and exquisite type of palindrome ever invented”. It may also be thought of as a syllabic Sator Square. Sanskrit aestheticians call it sarvatobhadra, “perfect in every direction” — it yields the same text if read forwards, backwards, down, or up:

सकारनानारकास–
कायसाददसायका ।
रसाहवा वाहसार–
नादवाददवादना ॥

“[That army], which relished battle (rasāhavā) contained allies who brought low the bodes and gaits of their various striving enemies and in it the cries of the best of mounts contended with musical instruments.


सा सेना गमनारम्भे
रसेनासीदनारता ।
तारनादजनामत्त
धीरनागमनामया ॥

The 29th stanza can be arranged into the shape of a “drum” (muraja-citra):

The first, second, third, and fourth lines give the same text when read along a “drum” pattern.

“That army was very efficient and as it moved, the warrior heroes were very alert and did their duties with great concentration. The soldiers in the army made a loud sound. The army was adorned with intoxicated and restive elephants. No one was there with any thought of pain.”

In the 118th stanza, each half contains the same pāda twice, but with different meanings. This is known as samudga:

सदैव संपन्नवपू रणेषु
स दैवसंपन्नवपूरणेषु ।
महो दधे ‘स्तारि महानितान्तं
महोदधेस्तारिमहा नितान्तम् ॥

Illustration of cakrabandha constraints, with hidden message. The canto also includes stanzas which can be arranged into the shape of a sword, zigzags, and other shapes.

Finally, it ends with a stanza (120th) in the extremely difficult “wheel design” known as cakra-vṛtta or cakrabandha, wherein the syllables can be arranged in the form of a wheel with six spokes.

सत्वं मानविशिष्टमाजिरभसादालम्ब्य भव्यः पुरो
लब्धाघक्षयशुद्धिरुद्धरतरश्रीवत्सभूमिर्मुदा ।
मुक्त्वा काममपास्तभीः परमृगव्याधः स नादं हरे–
रेकौघैः समकालमभ्रमुदयी रोपैस्तदा तस्तरे ॥

In the figure, the first, second and third lines are read top-to-bottom along the “spokes” of the wheel, sharing a common central syllable, while the fourth line is read clockwise around the circumference (starting and ending where the third line ends), sharing every third syllable with one of the first three lines. Further, the large syllables in bold (within the annuli), read clockwise, spell out śiśupālavadha-māgha-kāvyamidaṃ (“This is Śiśupālavadha, a poem by Māgha”).

One may say that English is not amenable to such word plays that Sanskrit affords, but still, the contribution to literature by many of the great Sanskrit poets such as, Kalidasa, Bharavi, Agasthya Kavi, Sharan, Magha and others are indeed of great quality. It is a pity that the literary world is not conscious enough to their contributions.

சைவம் வைணவத்தைவிட சற்று தாழ்ந்ததுதானோ?

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்கள் இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. ஆயினும் அவைகள் பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் போன்று அவ்வாறு பிரசித்தம் ஆகவில்லை. ஏனோ தெரியவில்லை. அப்படி ஆகியிருந்தால் ஒரு வேளை பல சிவன் கோயில்கள் கேட்பாரற்றும் சிதிலமடைந்தும் இல்லாமலிருக்குமோ?

மயிலாடுதுறை அருகே சுமார் 12 கிமீ தொலைவிலிருக்கும் திருக்கொறுக்கை எங்கள் குலதெய்வமான வனதுர்க்கை போயிலுக்கு செல்லும்போது அங்கு இருந்தவர்களின் பரிந்துரையின் பேரில் அருகில் உள்ள வீரட்டீஸ்வரர் கோயிலை தரிசிக்க சென்ற போது என் மனத்தில் இதுதான் தோன்றியது.

வலைதளத்தில் இக்கோயிலின் விவரமும் கிடைத்தது.: திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலமாகும்:

“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய்வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே” என்பதுதான் அந்த பாடல்.

‘தீர்க்கபாகு‘ என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் ‘குறுங்கை முனிவர் ‘ என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘குறுக்கை‘ என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது. மன்மதனை எரித்தத் தலமாக இது கருதப்படுகிறது. காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை ‘ 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது. இந்த அளவில் சிறப்பு பெற்ற இந்த தலக்கோயிலுக்கு 1959இல் கும்பாபிஷேகம் நடந்ததாக ஒரு கல்வெட்டு குறிக்கிறது! அதுதான் கடைசி என நம்பும் வகையில்தான் இக்கோயிலின் இன்றைய நிலையும் உள்ளது. ஆம். 64 வருடங்கள் கழித்து தற்போது புனரமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சாலை வழி கூட சரியில்லை. கோயில் வழிபாடு குறைந்துவிட்டதோ? சுற்றுலாத்துறை இதில் கவனம் செலுத்த தவறிவிட்டதோ? அறநிலயத்துறை என்றும் ஒன்று உள்ளதாக கேள்விப்படுகிறோமே? தென்னிந்திய கோயில்கள் வடக்கைக்காட்டிலும் மிகவும் பிரமிக்கத்தக்கவை. புதிதாக கட்டியலாவிட்டாலும் இருப்பதை பராமரிக்கக்கூட இயலாத சமுதாயமா நமது?

சில சிவத்தலங்கள் பிரபலமடைய திரையுலக பிரபலங்கள் தேவைப்படுகிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன் அவ்வளவாக அறியப்படாத அண்ணாமலையானுக்கு இன்று ரஜினிகாந்தும் இறையராஜாக்களும் தேவைப்படுகிறது என்பது சற்று நெருடல்தான்.

பக்தர்களால் வைணவத்தலங்களுக்கு கிடைக்கும் கவனம் சைவத்தலங்களுக்கு இல்லாததின் காரணம் என்னவாக இருக்கும்? வைணவர்களுக்கு ஹரியிடம் உள்ள பிடிப்பும் நம்பிக்கையும் சைவர்களுக்கு ஹரனிடம் இல்லை. சைவக்கோயில்களும் தலங்களும் இந்த அவலநிலைக்கு உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.

நல்ல பராமரிப்பில் உள்ள சிவத்தலங்களை கைவிரலில் எண்ணிவிடலாமோ? ஏன் இந்த அவலநிலை? இத்தகைய பொக்கிஷங்கள் மேலைநாட்டிலிருந்தால் இப்படி சிதைய விட்டிருப்பார்களா? நாம் மட்டும் ஏமாந்திருந்தால் சிலைகளை மட்டும் திருடிய அவர்கள், கோயிலையும் அங்கம் அங்கமாக பிரித்து அவர்கள் நாட்டிலேயே திரும்பவும் கட்டமைத்து நமக்கே அதை சுற்றுலா தலமாக காண்பித்திருப்பார்கள்! மதபேதமின்றி கலாசார புதையல்களை காப்பாற்றாவிடில் காலம் நம்மை மன்னிக்காது.

அது ஒரு புறம் இருக்கட்டும். அரியும் சிவனும் ஒன்றுதான் அதை அரியாதவன் வாயில் மண்ணுதான் – என்னதான் சொல்லிக்கொண்டாலும் பலப்பல சைவத்தலங்கள் மட்டும் இப்படி கேட்பாரற்று இருப்பதை கண்டால் மனம் சற்று வலிக்கத்தான் செய்கிறது!

Forgetfulness – a vice or virtue?

It is not uncommon that many of us forget our house keys, the names of certain acquaintances, vital items from the shopping list, so on.. the list is pretty long for some. We often complain these to our bad memories. What would we do to recollect?

Close our eyes and start think long more strenuously – but frustratingly the fish would not bite the hook! Or Strike violently at the temples and forehead, enhancing only the irritation as when slot machine refuses to render the due despite violent shaking! The more harder you try, the more elusive it is! No amount of exertion would regurgitate the needed information from the gulf of memory! Once you allow things to cool, ignoring totally the present conundrum, attend to other chores or even sleep over the problem (literally)- BANG – here it comes – the key out of the blue; you even wonder how come come you missed it so long!

Is this the same as rebooting of the computer? oh no. Rather the exact opposite. Brain does not shut down by one’s volition; the command for recollection resides in the brain and the retrieval process continues involuntarily, non-stop. When the treasure is found all of a sudden, you are elated with the recollection, whatever routines you may be in! It is akin to the taking out your vehicle from a chaotic parking lot – lot of trials – before reaching a (data) highway! Only difference is the driver is not your ‘self’ but an involuntary self!

Researches vouch that recalling a stored information would depend on both the Retrieval and Storage strengths. Training helps to build it as practiced by our ancestors by way of hymns and mantras. On a physiological level it could be the neurons in the brain that are responsible for this phenomenon. They decay as one gets aged so do the forgetfulness. They could be tagged as suffering from ‘Alzheimer’s disease’. Are you not aware of some absent minded professors who have similar memory losses, though only on a smaller scale? But they are not treated for their ‘disease’ but their ‘episodes’ are hilariously shared!

But what might count as a rank it might be a nuisance when memory slackens, on a practical level it turns out to be an unparalleled blessing on an emotional one. We are rescued from many of our sorrows not by active solutions or nifty work of the intellect but by our reliable tendencies to forget. Our minds are so constituted that the gravest incidents eventually slip from our grasp. We lose sight not only of the beautiful and kind things that have occurred but also, more usefully, the catalogue of horrors that we were once certain we would never be able to surmount.

We may lament our far-from-perfect memories, but we should be grateful for them. If we had a recollection of every occasion when someone had been unkind to us, of every slight that had come our way, every mistake we had committed and every hope that had been frustrated, life would swiftly grow untenable. Fortunately, we have been endowed with a special incapacity. The slate is always, gradually being wiped clean, ensuring that we end up ignorant of what once left us certain that we should end our lives by nightfall.

Sleep and forgetfulness are boons to mankind, else our life would be full of miseries due to past events. Time is the best healer only because of this.

Let us thank the almighty for bestowing (a certain amount of) loss of memory, else the life would have been (more) miserable!

தங்கிலீஷ் – தமிழை துரத்திவிடுமோ?

“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”-

“என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”

இந்த மாதிரி இன்னொரு மொழிச் சொல்லை இடைஇடையே பயன்படுத்துவதால் ஒரு மொழி அழிந்து விடாது.

அதே போல் வேற்று மொழி சொற்களை தன்னகப்படுத்துவதும் ஒரு மொழிக்கு அழகூட்டும்: முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்… பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்… போன்றவை வடமொழி் சொற்களா அல்லது ஒரு வேளை இவை தமிழேதானோ என ஐயம் ஏற்படும் அளவுக்கு தமிழில் ‘ஐக்கியம்’ ஆகிவிட்டன!

மணிப்பிரவாளம் என்ற ஒரு தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒரு மொழியே முற்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு மொழிகளின் பயன்பாட்டு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் தமிழில் கலந்த சமஸ்கிருதம் தமிழாகவும் சம்ஸ்கிருத்தில் கலந்ததமிழ் சமஸ்கிருதமாகவும் ஆகிவிட்டது. இது போலவே இப்போது தமிழில் கலந்த ஆங்கிலம் பின்பு தமிழ் வார்த்தை ஆகவே மாறி விடும்.

இது தமிழுக்கு மட்டும் அல்ல. எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். Purest language is the poorest language. ஆங்கிலத்தின் பயன்பாட்டு வளர்வுக்கு மற்ற மொழிகளின் வார்த்தைகளை அதில் பயன் படுத்த எளிது என்பதும் ஒரு காரணமோ?

ஆயினும் fashionக்காக ஆங்கிலத்தில் உரையாடுவதும், முழுமையாக ஆங்கிலத்தில் பேச வராத தருணத்தில் மட்டும் தமிழுக்குத் தொத்துவதும் . . . தவிர்க்கப் படவே வேண்டும் என்று தோன்றுகிறது.

வீட்டில் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் தூயதமிழில் உறையாட இயலாது என்பதுதான் யதார்த்தம். அதே வேளையில் சரளமாக உறையாட ஆங்கிலம் கலப்பதில் என்ன தவறு? கலப்படம் எப்போதுமே ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்லவே! Cocktailsஇன் சுவையே தனிதானே!

ஆங்கிலத்தில் உறையாடுவது தாம் சமுதாய மேல்தட்டில் இருப்பதை வெளிப்படுத்தத்தானோ என்ற உணர்வில் உண்மை உள்ளதாக தோன்றுகிறது. இலங்கை, மலேஷிய தமிழர்கள் உறையாடுவதிலும் தமிழ்நாட்டு தமிழர்கள் உறையாடுவதிலும் இந்த வேறுபாடு தெளிவாக வெளிப்படும். தமிழில் உறையாடுவதில் அவர்கள் பெருமைப்படுகிறார்கள். தமிழ்நாட்டு தமிழனுக்குத்தான் மொழி பற்று மிகவும் குறைவு என்று தோன்றுகிறது. ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை?

தன் குழந்தைக்கு ஆங்கில rhymes நன்றாக பாடவரும் என்று கூறி பெருமைப்படும் பெற்றோர் எண்ணிக்கை தற்போது அதிகம். தாய்மொழியில் பாடல்கள் இல்லையா? ஆரம்ப பள்ளியில் கட்டாயமாக்குவதுதான் மொழி அழியாமல் இருக்கச்செய்வதன் முதல் படி. தமிழ் ஆர்வலர்கள் ஆட்சியாளர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டும். வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த சமுதாயத்தினர் இதனை அந்தந்த நாட்டில் விருப்ப பாடமாக இணைக்கச்செய்ய வேண்டும். ஒரு மொழி அழியாமல் இருக்க இதுதான் ஒரே வழி. இது எல்லா மொழிகளுக்கும் பொருத்தும்.

1965இல் மலேஷியா, சிங்கப்பூர் இடையே இனக்கலவரம் வெடித்து தனிநாடுகளாக பிரிய சீன, மலாய் மொழிக்கல்வி முறையில் பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம். LKG UKG தொடங்கி, ஐந்தாம் வகுப்பு வரையாவது ஆங்கிலத்தில் மட்டும் கற்பிப்பது தடுக்கப்பட்டு தாய்மொழி போதனையும் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் தாய் மொழியை கற்பிப்பதை தவிர்ப்பதுதான் மொழி அழிய ‘மூல’ காரணம், தங்கிலீஷ் பயன்பாடல்ல! உயர்கல்வியை மட்டும் ஆங்கிலத்தில் பயிற்பிப்பதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழியை கறபிப்பது அந்த மொழியை அழியாமல் காக்கும் என்பதும் திண்ணம்.

மொழிதான் ஒரு சமூகத்தின் குறியீடு – அந்த மொழி கல்விமுறையில்தான் காக்கப்பட வேண்டும். உயர்கல்வியை தாய்மொழியில் பயிற்பிப்பதால்தான் அம்மொழி வளரும் என்பதில் உண்மையில்லை. அன்னிய மொழியால் அறிவடைந்து அந்த பொருளாதாரத்தால் சமுதாயம் உயர்ந்தால், தாய் மொழியின் பயன்பாடும் தானாகவே வளரும்!

Gopurams, The Pride of South Indian Temple architecture

Gopuram in South Indian temples, represents the central Brahmasthan which is the energy field. This energy field in three dimension is taken to the top level of the gopuram and this confers spiritual benefits to the visitors of the temple.

The gopuram architecture is something unique to be proud off. We lack in marketing our stuff and being an Indian, true to our nature, we downplay our greatness and belittle our own treasures!

Recently I was fortunate to visit Murdeswar temple, A real beauty in temple architecture. Its gopuram is listed as the tallest with 20 tiers measuring a total height of 249 ft.

The next in the list are,
Ranganathaswamy Temple, 239.5ft with 13 tiers,
Annamalaiyar Temple, 216.5ft (11 tiers)
Srivilliputhur Andal Temple, 193.5ft (11 tiers).

While these tall gopurams are nearly similar in shape except Murdeswar where, the contour of the side line from the base being less acute or less slant! It is also interesting to note that the same contour of Srivilliputhur tower is not a straight line like others but is a hyperbola (could this be the reason for its adorning TN state insignia?)!

From engineering view point, these tall gopurams, that are constructed in places with lesser soil bearing capacity are engineering marvels.

Isn’t it preposterous that the leaning tower of Pisa which is failing due to differential settling and sinking foundation is considered one of the seven wonders, while those that withstood centuries of weather get unnoticed! Our own brethren go to Italy to get a glimpse of the ‘falling tower of Pisa’, rather than witnessing these spenders, as anything in the west must be better than ours!

It is absurd that marginal failures are credited the most while absolute successes fall wayside!!!

Kashi – Rameswaram mythical connection

Kashi – Rameswaram connection – here is a rationalist’s considered view – take it or leave it!

According to legend, by using it the launch pad to attack Lanka to retrieve Sita from Ravana, Lord Rama sanctified Rameswaram. And on His return from Lanka, he stopped here to worship Lord Siva for absolving his sin (brahmahatti dosha) in killing the brahmin, Ravana.

Legend has it that Rama asked Anjaneya to get a Viswa lingam, the presiding deity of Kasi, to perform the ‘dhosha nivarthi puja’ – Kashi is also known as ‘moksha puri’, being the abode of kala Bhairav’ who wards off such sins!

Anjaneya, on his way back from Kasi, was intercepted by Sage Narada who insisted Anjaneya also do the puja with a separate lingam as he had also killed many in the battle with Ravana. Hence he flew back to Kasi to get one more lingam. Since Anjaneya did not turn up on time and as the auspicious time was running out, Sita made a lingam out of sand, and the puja was performed in time. Much to his dismay, when Anjaneya returned with the lingams, he noticed that the puja had already been performed. However, he implored Rama to substitute the lingam made out of sand with his Viswa lingam. Rama readily agreed and asked Anjaneya to remove it. With all his might Anjaneya tried to lift it but was unsuccessful and fainted. When he regained consciousness, Rama assured him that the Viswanatha lingam would be installed north of the one that was consecrated by Him.

The one first installed by Rama goes by the appellation Ramanatha Swamy and the other as Viswanathar. Further Rama enjoined that the first puja henceforth be performed to Viswanathaswamy and then to Ramanathaswamy which is followed till date. And the second one was installed at the Anjaneya temple here.

It is believed that the well water ‘Agni theertham’ used by Sri Ram to perform linga Abhisheka, to ward off the ‘brahmahathi dhosha’, is simulated by the Hindus to get rid of ‘pitrudhosha’! But taking this well water to Kashi to perform abhishekam to Kashi Viswanath – followed by doing abhishekam with Ganga jal to Rameswaram linga, could be a later addition that crept in the customs. Is this custom prevalent among North Indian Hindus too?? This could have been prescribed to make people visit these two far lying holy temples (at least once in their lifetime) which was a humongous task those days!

Why would wavering Hindus otherwise go to temples at least on Fridays, if not sanctified as most ‘auspicious’?

Proof of Pudding

The proof of pudding is in the eating! But Is it wise to be Guinea pigs (except for a dutiful Indian husband) as only after eating one can certify the pudding!

This conundrum struck me when I read a news item citing a recent scientific publication on the approval of covaxin without going through the rigours of established clinical norms! https://www.hindustantimes.com/india-news/covaxin-approval-sparks-questions-and-clarifications-101668707429850.html Many doctors (and politicians) on that day suggested to take only covishield which was a tested ‘foreign’ elixir and boycott ‘covaxin’! There was no takers and the medical fraternity was dissatisfied with the blatant violation of protocols! When the pudding was finally proved ‘better’ as things unfolded later, covaxin demand hit the roof and was in short supply! Remember the long waits – It was indeed a mad rush!!! The pendulum swung to the other extreme!

In a vibrant and vocal democracy like India, had there been ‘a slip’, that is, if the efficacy of covaxin had been found less, the ‘expert group’ would have been taken the hit for yielding to the political (read Modi) pressure! Was it luck, calculated risk or the success that won the game?

Look at our neighbour, the great China! In spite of proven unsuccessful (Sinopharm) vaccine (in many of their friendly countries included), not only was there no (loud) whispers or blinking of eyelids, but Xi Jinping got also a historical third term for his unique and successful covid management model! It is natural that one would not be aware of Orwell’s novel ‘1984’ for being an ardent supporter of Xi!

At the end of the day, one would easily conclude that only an adulterated democracy is good (India included!) for the humanity at large – you are welcome to record dissent anyway??

SC is presently engaged in the post-mortem suit of the legality of ‘2016-demonetisation’? It would be interesting if it is pronounced illegal but proved successful by (unbiased) economists!